Kidny

Kidny

உள்ளூராட்சி மன்ற தேர்தல் திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் கரு ஜெயசூரிய கையெழுத்திட்டார் ..


உள்ளூராட்சி மன்ற தேர்தல் திருத்தச் சட்டமூலத்தில், இன்று காலை சபாநாயகர் கரு ஜெயசூரிய கையெழுத்திட்டுள்ளார். 


இந்தச் சட்­ட­மூ­லத்தின் பிர­காரம் உள்­ளூராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­த­லா­னது கலப்பு முறையில் அதா­வது, 60 வீதம் தொகு­தி­வாரி முறை­யிலும் 40 வீதம் விகி­தா­சார முறை­யிலும் நடை­பெ­ற­வுள்­ள­தோடு பெண்­க­ளுக்கு 25வீதம் ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் உள்­ளு­ராட்சி மன்­றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்­ச­ராக இருந்த ஏ.எல்.எம்.அதா­வுல்­லா­வினால் உள்­ளு­ராட்சி அதி­கார விசேட ஒழுங்­குகள் சட்டம் மற்றும் உள்­ளு­ராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டம் ஆகிய உத்­தேச பிரே­ர­ணைகள் சமர்ப்­பிக்­கப்­பட்டு வாக்­கெ­டுப்­பின்றி நிறை­வேற்­றப்­பட்­டிருந்தது.

எனினும் 2012ஆம் ஆண்டு அப்­போ­தைய பொரு­ளா­தார அபிவிருத்தி அமைச்­ச­ராக இருந்த பஷில் ராஜ­ப­க்ஷவின் தலை­யீ­டு­க­ளுடன் மேற்­கொள்­ளப்­பட்ட எல்லை நிர்­ணயம் சிறு­பான்மை சமூ­கங்­களின் பிர­தி­நி­தித்­து­வங்­களைக் குறைக்கும் வகையில் அது அமைந்­த­தாக விமர்­ச­னங்கள் எழுந்த நிலையில், தற்­போ­தைய தேசிய அர­சாங்கம் ஆட்­சிப்­பீடம் ஏறி­யதும் மீண்டும் எல்லை நிர்­ணயக் குழு நிய­மிக்­கப்­பட்­டது.

அக்­கு­ழு­வா­னது எல்லை நிர்­ண­யத்­தினை வகுப்­ப­தற்­கான பணியினை ஒரு­வ­ரு­ட­கா­ல­மாக மேற்­கொண்டு கடந்த டிசம்பர் மாதம் அமைச்சர் பைசர் முஸ்­த­பா­விடம் எல்லை நிர்­ணய அறிக்­கையைச் சமர்ப்­பித்­தி­ருந்­தது. ஏனினும் தொடர்ச்­சி­யாக இழு­ப­றிகள் இடம்­பெற்று வந்­தன.

குறிப்­பாக தொகு­தி­வாரி முறைமை, விகி­தா­சார முறைமை ஆகி­ய­வற்­றுக்­கான சத­வீ­தங்கள்,பெண்­க­ளுக்­கான ஒதுக்­கீட்டுச் சத­வீ­தங்கள் குறித்து தொடர்ந்தும் கலந்­து­ரை­யா­டல்கள் இடம்­பெற்று வந்­தி­ருந்­தன.

அண்­மையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும் அர­சியல் கட்­சித்­த­லை­வர்­க­ளுக்கும் இடையில் நடை­பெற்ற சந்­திப்­பின்­போது குறிப்­பாக சிறு,சிறு­பான்மை அர­சியல் கட்­சி­க­ளினால் முன்­வைக்­கப்­பட்ட நிபந்­த­னைகள் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­ட­தை­ய­டுத்து அனைத்து தரப்­புக்­க­ளுக்­கி­டை­யிலும் இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டி­ருந்­தது. இவ்­வ­றான நிலை­யி­லேயே மேற்குறித்த சட்ட மூலம் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் கரு ஜெயசூரிய கையெழுத்திட்டார் .. உள்ளூராட்சி மன்ற தேர்தல் திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் கரு ஜெயசூரிய கையெழுத்திட்டார் .. Reviewed by Madawala News on 8/31/2017 05:14:00 PM Rating: 5