Kidny

Kidny

கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீ.ல.சு.கட்சி மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும்..


அஷரப் ஏ சமத்-

ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சியின் முஸ்லீம் பிரிவு கூட்டாம் ்இன்று பி.பகல் கொழும்பு ஸ்ரீ.ல.சு. கட்சித் தலைமையகத்தில் அதன் தலைவர் சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏம். ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர் எம்.மஸ்தான், வடக்கு ஆளுனர் ரேஜிரேல்ட் குரே முன்னாள் அமைச்சர் அதாவுட செனவிரத்தின, நஜீப். ஏ மஜீத் மற்றும் மகாண சபை உறுபபினர்கள் முன்னாள் ஸ்ரீ.ல.சு.கட்சி யின் முஸ்லீம் உள்ளுராட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இங்கு உரையாற்றி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்

ஓக்டோபர் 2ஆம் திகதியுடன் உள்ளுராட்சி தேர்தல் வட்டார முறை தேர்தல் பாராளுமன்றத்தில் வாக்கெடுத்து அதன் பின்னர் அமுலுக்கு வரும்.அதே போன்று தான் பிரதம மந்திரி 9 மாகாணசபைகளையும் ஒன்றரை வருடத்திற்கு பிற்படுத்திஒரு நாளில் தேர்தலை நடாத்த திட்டமிட்டிருந்தார்.

அதனை ஸ்ரீ.ல.சு கட்சி எதிர்த்தது.எதிர்வரும் ஒக்டோபரில் 2ஆம் திகதியுடன் முடிவடையுடம் கிழக்கு மாகாணம் உட்பட ஏனைய இரண்டு மாகாணசபைகளுக்கான பதவிக்காலம் முடிவடைந்ததும் அதனை தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்து அடுத்த மாதமே தேர்தல் நடாத்தப்படல் வேண்டும். 

இதனையே ஸ்ரீ.ல.சு.கட்சி பிரதமருக்கு அறிவித்து பிரேரனையும் நிறைவேற்றியது. ஆகவே நாம் உள்ளுராட்சித் தேர்தலில் வட்டார முறைமையினால் சிங்கள மக்களோடு கலந்து வாழும் பெரும்பாண்மையான உறுப்பினர் இல்லாமல் போகிவிட வாய்ப்புகள் உள்ளன.

இங்கு வருகை தந்துள்ள முன்னாள் உள்ளுராட்சி உறுப்பினர்கள் அடுத்த முறை அந்த உறுப்பினர்கள் இல்லாமல் போகிவிடலாம்.நாம் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்றால் ஒன்று இரண்டு போனஸ் ஆசனம் கிடைக்கும் அதுவும் வாக்குகள் அடிப்படையில் அடுத்த உள்ளவருக்கு தான் அந்த போனஸ் ஆசனம் கிடைக்கும்.

நாமும் மஹிந்த அணி சி.ல.சு.அணி என பிரிந்திருந்தேமாயானால் நமக்கு ஒரு ஆசனமும் இல்லாமல் போகிவிடும்.எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு நமது உறுப்பினர்கள் போட்டியிடுவதற்கு அமைச்சர் பௌசி ஊடாக கலந்து ஆலோசித்து செயற்படல் வேண்டும். 

கிழக்கு மாகாணசபையைக் கூட கடந்த இருமுறை ஸ்ரீ.ல.சு கட்சியை முதலமைச்சராகவும் இருந்து வந்தது. ஆனால் தற்போது நாம் எதிர்கட்சியில் ஆசனத்தில் இருக்கின்றோம்.எதிர்காலத்தில் நாம் அவ்வாறு இல்லாமல் மீண்டும் கிழக்கு மாகாண சபை ஸ்ரீ.ல.சு.கட்சியில் ஆட்சியில் அமர வேண்டும். அதற்காகவும் நாம் கட்சி ரீதியாக ஒன்றுபட்டு உழைத்தல் வேண்டும் என குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீ.ல.சு.கட்சி மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும்.. கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீ.ல.சு.கட்சி மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும்.. Reviewed by Madawala News on 8/15/2017 07:47:00 PM Rating: 5