tg travels

டன் பிரியசாத்தால்  மீண்டும் சர்ச்சை .. வெள்ளம்பிடிய சம்பவம் ..


சற்று காலம் மவுனமாக இருந்த டன் பிரியசாத் என்பவர் மீண்டும் புதிய சர்ச்சை ஒன்றுடன் வெள்ளம்பிட்டி பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.


வெள்ளம்பிடிய பிரதேசத்தில் வசிக்கும் முஸ்லிம் பெண்மணி ஒருவர் பால் உற்பத்தி நிறுவனம் ஒன்றின் கருத்துக்கணிப்பு என்ற போர்வையில் கர்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளை அழைத்து சென்று பால் மாதிகரிகளை பருக செய்வதுடன் அதற்காக பணமும் வழங்குவதாக டன் பிரியசாத் தரப்பு குற்றம் சுமத்தியுள்ளது.


குறித்த பால் மாதிரிகள் சிங்களவர்களை இலக்கு வைத்து வழங்கப்படுவதாகவும் கருத்தடை அல்லது மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அந்த தரப்பு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளது.


இந்த நிலையில் குறித்த முஸ்லிம் தரப்பை நாம் இது தொடர்பில் தொடர்பு கொண்டு வினவிய போது,


இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள சந்தைப்படுத்தல் நிறுவனம் ஒன்றின் மூலம் மேற்கொள்ளப்படும் கருத்து கணிப்பை இனவாத ரீதியில் சித்தரித்து இவர்கள் குற்றம் சுமத்திவருவதாகவும் , சந்தைக்கு வரவிருக்கும் புதிய சுவைகளடங்கிய பால் வகை தொடர்பில் மக்களின் விருப்பத்தை அறிய இந்த கருத்து கணிப்பு மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிட்டனர்.


இந்த விடயத்தில் டன் பிரியசாத் போன்றவர்கள் நடந்துகொள்ளும் விதம் குறித்து கடும் கட்டணங்கள் எழுந்துள்ளன.

டன் பிரியசாத்தால்  மீண்டும் சர்ச்சை .. வெள்ளம்பிடிய சம்பவம் .. டன் பிரியசாத்தால்  மீண்டும் சர்ச்சை .. வெள்ளம்பிடிய சம்பவம் .. Reviewed by Madawala News on 8/10/2017 12:45:00 PM Rating: 5