Kidny

Kidny

முஸ்லிம் காங்கிரசினுடைய தேசிய பட்டியல் கிழக்கு முதல்வர் நசீர் அஹமட்டுக்கு வழங்கப்படுவது காலத்தின் தேவை. நாபீர் பெளண்டேசன்.


-ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-

முஸ்லிம் காங்கிரசினுடைய தேசிய பட்டியல் கிழக்கு முதல்வர் நசீர் அஹமட்டுக்கு வழங்கப்படுவது காலத்தின் தேவை. நாபீர் பெளண்டேசன்.

வருகின்ற செப்டம்பர் மாதம் 24ம் திகதி கிழக்கு மாகாண சபை கலைக்கப்படுமாயின் தற்பொழுது கிழக்கின் முதலமைச்சராகவும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைமையான அப்துர் ரவூப் ஹிபத்துல் ஹக்கீமிற்கு அடுத்ததாக தலைமை பதவிக்கு தகுதியானவராகவும், ஆளுமைமிக்க மட்டக்களப்பு மாவட்ட அரசியல் தலைமையாகவும் இருக்கின்ற அல்ஹாஜ் ஹாபிஸ் நசீர் அஹமட்டுக்கு சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற தேசியபட்டியல் ஆசனத்தினை வழங்கி கட்சியினையும், கிழக்கு மாகாண அரசியலினையும் ஒரு இஸ்தீரதன்மைக்கு கொண்டு வருவது காலத்தின் கட்டாய தேவை என சமூக சேவைகள் அமைப்பான நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவரும் பொறியியலாளருமான உதுமான்கண்டு நாபீர் தெரிவிக்கின்றார்.

மேலும் குறித்த விடயம் சம்பந்தமாக தனது கருத்தினை தெரிவித்த பொறியியலாளர் உதுமான்கண்டு நாபீர்….. முஸ்லிம் காங்கிரசினுடைய தலைமை கிழக்கு மாகாண ஆட்சி முடிவிற்கு பிற்பாடு கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டுக்கு தேசிய பட்டியல் பாராளுமன்ற ஆசனத்தினை கொடுக்க முற்படுகின்ற பொழுது கிழக்கு மாகாணத்தில் வாழுகின்ற மூவின மக்களுக்கும் அது பயனுள்ளதாக அமையும். அதற்கு முக்கிய காரணமாக வெளிநாட்டு, சர்வதேச ரீதியாக பல முதலீடுகளை இலங்கைக்குள் கொண்டு வந்து வேலை வாய்ப்பில்லாமல் இருக்கின்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்களை கொடுக்க கூடிய ஓர் ஆளுமைமிக்க அரசியல் தலைமையாகவே நான் தற்போதைய கிழக்கின் முதல்வருடைய கடந்த கால செயற்பாடுகளையும் எதிர்கால செயற்பாடுகளையும் பார்க்கின்றேன்.

அதைவிடுது தற்பொழுது அம்பாறை மாவட்டத்தினை பிரதி நிதித்துவப்படுத்தி மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அதிலும் இரண்டு பிரதி அமைச்சர்கள் காணப்படுகின்றார்கள். குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களால் அம்பாறை மாவட்டத்திற்கு இது வரை காலமும் ஏதாவது செய்யப்பட்டுள்ளதா என பார்க்கப்போனால் அது கேள்விகளாகவே இருந்து கொண்டிருக்கின்றது.

இந்த இடத்திலே எனது பிரதேசத்தினை பிரதி நிதித்துப்வப்படுத்துகின்ற சம்மாந்துறையினை சேர்ந்த சகோதரர் மன்சூர் புதிதாக பாராளுமன்ற நுளைந்தாலும்,! துடிப்பான முறையிலும், பல அபிவிருத்திகளை முன் நின்று செய்யக்கூடியவர். ஆகவே மன்சூருக்கு பல அதிகாரங்களை முஸ்லிம் காங்கிரசின் தலைமை கொடுக்கின்ற பட்சத்தில் இன்னும் பல முன்னேற்ற கரமான விடயங்களை அரசியல் ரீதியாக அம்பாறை மாவட்டத்தில் மன்சூரினால் செய்ய முடியும் என்பதே நாபீர் பெளண்டேசனின் கருத்தாக இருக்கின்றது.

இந்த நிலையில்., ஏற்கனவே மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசினை பிரதி நிதித்துவப்படுத்தி அம்பாறை மாவட்டத்தில் இருக்கின்ற பொழுது அம்பாறை மாவட்டத்திற்கு தேசிய பட்டியல் மூலமாக இன்னும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் தேவைபாடு எதுவும் கிடையாது. அதே போன்று அட்டாளைச்சேனைக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சும் இருக்கின்ற நிலையிலே உடனடியாக அட்டாளைச்சேனைக்கு தேசிய பட்டியல் பாராளுமன்ற ஆசனத்தினையும் வழங்க வேண்டிய அவசியமும் கிடையாது. இதே போன்றே கல்குடா, மூதூர், காத்தான்குடி, வவுனியா போன்ற பிரதேசங்களையும் குறிப்பிடலாம். எனவே தற்பொழுது சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரசில் இருக்க கூடிய இளம் பாராளுமன்ற உறுப்பினரான மன்சூரினுடைய அதிகாரங்களை அதிகரிக்கின்ற பொழுது தேசிய பட்டியலினை அம்பாறை மாவட்டத்திற்கு வழங்குவதனை விடவும் கூடுதலான அபிவிருத்திகளை மேற்கொள்ளலாம் என்பதே நாபீர் பெளண்டேசனுடைய கருத்தாகவும், எதிர்ப்பார்ப்பாகவும் இருக்கின்றது.

ஆனால் காலா காலமாக அட்டாளைசேனைக்கு வாக்குறுதிகளை வழங்கி வருகின்ற சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையானது அடுத்த பாராளுமன்ற தேர்தலில் அட்டாளைசேனையில் பாராளுமன்ற வேட்பாளரினை களமிறக்கி அப்பிரதேச மக்களுடைய பாராளுமன்ற கனவினை நனவாக்க வேண்டும். இவ்வாறான கருத்துக்களை நாபீர் பெளண்டேசன் தெரிவிக்கின்ற பொழுது அதற்கான ஆதரவு அட்டாளைச்சேனையில் குறையும் என நினைக்கவில்லை. மாறாக முஸ்லிம்களினுடைய இருப்பானது காப்பாற்றப்பட வேண்டும் என்பதிலேயே நாங்கள் குறியாக இருக்கின்றோம்.

முஸ்லிம் காங்கிரஸ் மூலம் பிரதி நிதிகளை பாராளுமன்ற அனுப்புவதானது ஆசனத்தில் மட்டும் இருந்து விட்டு வருவதற்காக அல்ல. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களினுடைய பிரச்சனைகளை எதற்கும் தயங்காமல் பாராளுமன்றத்தில் எடுத்துரைக்க வேண்டும். அந்த அடிப்படையில் முஸ்லிம் காங்கிரசில் இருக்க கூடிய தேசிய பட்டியல் ஆசனத்தினை சுழற்சி முறையில் வழங்க முற்படுக்கின்ற பொழுது எதிர் காலத்தில் அதற்கு மிகவும் தகுதியானவர் தற்போதைய கிழக்கின் முதல்வர் நசீர் அஹமட் என்பதில் நாபீர் பெளண்டேசனிடம் மாற்று கருத்துக்கள் கிடையாது.  

தற்போதைய கிழக்கின் முதல்வர் அதிகாரத்தை கையில் எடுத்து விட்டு தூங்க கூடிய அரசியல்வாதி கிடையாது. மாகாண அமைச்சர் மற்றும் முதலமைச்சர் எனும் பதவிகள் தனது கைக்கு கிடைத்தற்கு பிற்பாடு பல்லின சமூகத்தினை கொண்ட கிழக்கு மாகாணத்தில் இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் எந்த மாகாணமும் கண்டிராத அபிவிருத்திகளை முன்னெடுத்து ஏனைய முதலமைச்சர்களுக்கு உதாரணமாக திகழ்ந்து காட்டியவர். கடந்த காலங்களில் ஆளுனருடைய மற்றும் இலங்கை கடற்படையினருடைய பக்கத்திலிருந்து வந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் கிழக்கில் எல்லா சமூகத்தினை பிரதி நிதித்துவப்படுத்துகின்ற முதுகெலும்புள்ள முதலமைச்சராக முகம்கொடுத்து, செயற்பட்டு அதனை செயலுறுவில் நிரூபித்து காட்டியவர்.

ஆகவே சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசினுடைய தலைமை இவ்வாறான விடயங்களை முக்கியமாக கருத்தில் கொண்டு தேசிய பட்டியல் விவகாரத்தில் சானக்கியமான முறையில் முடிவுகளை எடுக்காத பட்சத்தில் முஸ்லிம் காங்கிரசினுடைய இருப்பு அம்பாறை மாவட்டத்தில் இல்லாமல் ஆக்கப்படும் என்பதே நாபீர் பெளண்டேசனின் எதிர்வு கூறலாக இருக்கின்றது. எனவே கிழக்கின் முதல்வருக்கு சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய பட்டியல் பாராளுமன்ற ஆசனத்தினை கொடுத்து கிழக்கில் மட்டுமல்லாது தேசியத்திலும் தனது இருப்பினை தக்கவைத்து கொள்வதற்கு எதிர்காலத்தில் முயற்சி எடுக்க தவறும் பட்சத்தில் நாபீர் பெளண்டேசன் அந்த இடை வெளிகளை அரசியல் ரீதியாக நிறப்புவதற்காக முயற்சிகளில் ஈடுபடும் என்பதனையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். அத்தோடு இது கிழக்கின் முதலமைச்சர் ஹாபிஸ் நசீருக்காக அரசியல் வக்காளத்து வாங்கும் அறிக்கையோ அல்லது சுய நலமிக்க அறிக்கையோ இல்லை என்பதையும் கூறிக்கொள்ள விரும்புவதாக மேலும் தனது அறிக்கையில் பொறியியலாளர் உதுமான்கண்டு நாபீர் தெரிவித்தார்…

 

முஸ்லிம் காங்கிரசினுடைய தேசிய பட்டியல் கிழக்கு முதல்வர் நசீர் அஹமட்டுக்கு வழங்கப்படுவது காலத்தின் தேவை. நாபீர் பெளண்டேசன். முஸ்லிம் காங்கிரசினுடைய தேசிய பட்டியல் கிழக்கு முதல்வர் நசீர் அஹமட்டுக்கு வழங்கப்படுவது காலத்தின் தேவை. நாபீர் பெளண்டேசன். Reviewed by Madawala News on 8/01/2017 10:26:00 PM Rating: 5