tg travels

மியன்மார் அகதிகள் தனி வீட்டுக்கு மாற்ற நடவடிக்கை..



ARA FAREEL 
மிரி­ஹான பொலிஸ் நிலைய விஷேட தடுப்பு முகாமில் தங்க வைக்­கப்­பட்­டுள்ள மியன்மார் முஸ்லிம் அக­திகள் தடுப்பு முகா­மி­லி­ருந்தும் அகற்­றப்­பட்டு கல்­கி­ஸையில் தனி­யான வீடொன்­றுக்கு இடம் மாற்­றப்படவுள்ளனர்.

மிரி­ஹான பொலிஸ் நிலைய விஷேட தடுப்பு முகாமில் மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம் அக­தி­க­ளுக்கு இடம் பற்­றாக்­குறை நில­வு­வ­தாக பொலிஸார் தெரி­வித்து வந்த நிலையில் அவர்கள் அங்­கி­ருந்தும் இடம் மாற்­றப்­படவுள்ளனர் என மியன்மார் அக­திகள் விவ­கார நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுள்ள தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் அசாத் சாலி தெரி­வித்­துள்ளார்.

தடுப்பு முகா­மி­லி­ருந்தும் அக­தி­களை இடம் மாற்­று­வ­தற்கு வெளி­வி­வ­கார அமைச்சு, குடி­வ­ரவு –குடி­ய­கல்வு திணைக்­களம், மிரி­ஹான பொலிஸார், யு.என்.எச்.சி.ஆர் நிறு­வனம் என்­பன அனு­மதி வழங்­கி­யுள்­ள­தா­கவும் அசாத் சாலி தெரி­வித்தார்.

மியன்மார் அக­தி­களை வேறோர் இடத்­துக்கு இடம்­மாற்­று­வ­தற்கு நீதி­மன்றின் உத்­த­ர­வினைப் பெற்­றுக்­கொள்­ள­பட வேண்­டி­யுள்­ளது. எதிர்­வரும் 17 ஆம் திகதி அக­திகள் காங்­கே­சன்­துறை நீதிவான் நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­ப­ட­வுள்­ளனர்.

இந்­நி­லையில் 17 ஆம் திக­திக்கு முன்பு மியன்மார் அக­தி­களை இடம் மாற்­று­வ­தற்­கான உத்­த­ர­வினைப் பெற்­றுக்­கொள்­வ­தாக அசாத்­சாலி தெரி­வித்தார்.

இந்­தி­யா­வி­லி­ருந்து படகு மூலம் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு ரோஹிங்யா முஸ்லிம் அக­திகள் பய­ணித்த போது படகு கோளா­றுக்­குள்­ளாகி இலங்­கையின் வடக்கு கடல் எல்­லையில் கைது செய்­யப்­பட்­டனர். பின்பு அவர்கள் காங்­கே­சன்­துறை நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்படுத்­தப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். இவர்­களின் 7 ஆண்கள் 7 பெண்கள் மற்றும் 16 பிள்­ளைகள் அடங்­கு­கின்­றனர். 

இவ் அக­தி­களில் இளம் பெண் ஒருவர் மிரி­ஹான பொலிஸ் நிலைய கான்ஸ்­டபிள் ஒரு­வ­ரினால் பல­வந்­த­மாக பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உட்­ப­டுத்­தப்­பட்­டமை குறிப்பிடத்தக்கது. சந்தேக நபர் பொலிஸ் கான்ஸ்டபிள் அடையாள அணிவகுப்பின் போது பாதிக்கப்பட்ட பெண்ணினால் அடையாளம் காணப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மியன்மார் அகதிகள் தனி வீட்டுக்கு மாற்ற நடவடிக்கை.. மியன்மார் அகதிகள் தனி வீட்டுக்கு மாற்ற நடவடிக்கை.. Reviewed by Madawala News on 8/08/2017 03:56:00 PM Rating: 5