Ad Space avaiable

ஜனாதிபதி பிரதமர் ரவியுடன் கலந்துரையாடல் ! 


வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என ஊடக தகவல்கள் தெரிவித்த போதும் இன்று ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் இடம்பெற்ற பின்னர் ஜனாதிபதி பிரதமர் மற்றும் ரவி இடையே முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.


இதன்போது சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சிக்குள் ரவிக்கு எதிராக கிளம்பியுள்ள எதிர்ப்பு தொடர்பில் அவருக்கு எத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் ராஜினாமா தொடர்பில் ரவி கருணாநாயக்க இணக்கப்பாடு நொறுக்கு வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இருந்த போதும் சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முக்கியஸ்தர்களின் அழுத்தம் காரணமாக ரவி ராஜினாமா செய்யாவிட்டால் அவரை பதவி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படும் நிலையில் அதற்கு முன்னர் ரவி ராஜினாமா செய்வார் என தெரிகிறது.

சர்ச்சைக்குரிய திறைசேரி பிணை முறிப்பத்திர கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருக்கும் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை பதவியில் இருந்து விலகுமாறு அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் கோரப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

அதேவேளை அமைச்சர் கருணாநாயக்க தனது பதவியை இராஜினாமா செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை தவிர அமைச்சருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றும் சமர்பிக்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதி பிரதமர் ரவியுடன் கலந்துரையாடல் !  ஜனாதிபதி பிரதமர் ரவியுடன் கலந்துரையாடல் !  Reviewed by Madawala News on 8/09/2017 08:58:00 PM Rating: 5