Kidny

Kidny

நல்லாட்சிக்கு கஷ்டகாலம் வந்த எல்லா சந்தர்பங்களிலும் தாஜுதீனே கைகொடுத்துள்ளார்..


நல்லாட்சிக்கு கஷ்டகாலம் வந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தாஜுதீனே கை கொடுத்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நலீந்த ஜயதிஸ்ச குறிப்பிட்டார்.


இந்த ஆட்சியை கொண்டுவர தாஜுதீன் பாரிய பங்காற்றியதாக கூறிய அவர் கடந்த காலங்களில் நல்லாட்சிக்கு நெருக்கடி வந்த போது தாஜுதீனின் பிரேதத்தை தோண்டி எடுத்து அதன் மூலம் ஏற்பட்ட கலங்கத்தை மறைத்தாக குறிப்பிட்டார்.

தற்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் மீண்டும் தாஜுதீன் மேடைக்கு வந்துள்ளதாக குறிப்பிட்டார்.

தொலைகாட்சி அரசியல் விவாதம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.



நல்லாட்சிக்கு கஷ்டகாலம் வந்த எல்லா சந்தர்பங்களிலும் தாஜுதீனே கைகொடுத்துள்ளார்.. நல்லாட்சிக்கு கஷ்டகாலம் வந்த எல்லா சந்தர்பங்களிலும் தாஜுதீனே கைகொடுத்துள்ளார்.. Reviewed by Madawala News on 8/24/2017 01:46:00 AM Rating: 5