Ad Space avaiable

ரவிக்கு எதிராக வாக்களிப்போம் ! சுதந்திர கட்சி முக்கியஸ்தர்கள் பிரதமரிடம் தெரிவிப்பு ..


ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக கூட்டு எதிர்கட்சி சமர்பித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக தாங்கள் வாக்களிப்பதாக ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி அமைச்சர்கள் பிரதமரிடம் இன்று தெரிவித்துள்ளனர்.


இன்றைய அமைச்சரவை கூட்டம் இடம்பெற்ற பின்னர் பிரதமரை சந்தித்த சுதந்திர கட்சி அமைச்சர்கள் இந்த விடயத்தை அவரிடம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் ஜனாதிபதியிடன் கலந்துரையாடி மிக விரைவில் நல்ல ஒரு தீர்மானத்தை அறிவிப்பதாக பிரதமர் உறுதியளித்துள்ளதாக கொழும்பு அரசியல் பிரமுகர் ஒருவர் மடவளை நியுஸுக்கு குறிப்பிட்டார்.

சர்ச்சைக்குரிய திறைசேரி பிணை முறிப்பத்திர கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருக்கும் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை பதவியில் இருந்து விலகுமாறு அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் கோரப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

அதேவேளை அமைச்சர் கருணாநாயக்க தனது பதவியை இராஜினாமா செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை தவிர அமைச்சருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றும் சமர்பிக்கப்பட்டுள்ளது.



ரவிக்கு எதிராக வாக்களிப்போம் ! சுதந்திர கட்சி முக்கியஸ்தர்கள் பிரதமரிடம் தெரிவிப்பு .. ரவிக்கு எதிராக வாக்களிப்போம் ! சுதந்திர கட்சி முக்கியஸ்தர்கள் பிரதமரிடம் தெரிவிப்பு .. Reviewed by Madawala News on 8/10/2017 12:29:00 AM Rating: 5