tg travels

மாகாண சபை தேர்தலை பிற்போடக்கூடாது ; சுதந்திர கட்சி மத்திய குழு தீர்மானம்..


மாகாண சபை தேர்தலை பிற்போடக்கூடாது என சுதந்திர கட்சி மத்திய குழு தீர்மானித்துள்ளது.


இன்று இரவு ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற சுதந்திரக் கட்சி மத்திய குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வருட இறுதியில் காலம் நிறைவடையும் மாகாண சபைகளுக்கான தேர்தலை பிற்போட்டு அனைத்து மாகாண சபைகளுக்கான தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த அமைச்சரவை தீர்மாணித்திருந்த நிலையில் சுதந்த கட்சி மத்திய குழு இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

குறித்த தீர்மானத்தை அடுத்து தேர்தலுக்கு ஆயத்தமாகுமாறு ஜனாதிபதி சுதந்திர கட்சி மத்திய குழு உறுப்பினர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அறிய முடிகிறது.

மாகாண சபை தேர்தலை பிற்போடக்கூடாது ; சுதந்திர கட்சி மத்திய குழு தீர்மானம்.. மாகாண சபை தேர்தலை பிற்போடக்கூடாது ; சுதந்திர கட்சி மத்திய குழு தீர்மானம்.. Reviewed by Madawala News on 8/11/2017 12:26:00 AM Rating: 5