Kidny

Kidny

நாரம்மல பள்ளிவாயல் கல்வீச்சு ! சந்தேக நபர்கள் ஐவர் கைது..


குருநாகல் மாவட்டம் நாரம்மல பொல்கஹயாய பிரதேத்தில் அமைந்துள்ள மஸ்ஜித் அன்னூர் ஜும்மா பள்ளிவாயல் மீது நேற்று நள்ளிரவு கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவத்தில் தொடர்புடைய ஐந்து பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நள்ளிரவு இரண்டு மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் பள்ளிவாயல்

மீது கல்வீசி தாக்கியபோது அங்கு தஹ்வா பணியில் இருந்த தப்லீக் சகோதரர்கள் ஒலிபொருக்கி மூலம் அறிவித்தல் விடுத்தமையை தொடர்ந்து ஊர் மக்கள் அங்கு பள்ளிவாயலில் குழுமியுள்ளனர்.

பள்ளிவாயல் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியவர்கள் தாக்குதல் நடத்த முன்னர் சந்தேகத்திற்கிடமான முறையில் உலவியது நாரம்மல பகுதி ஹோட்டல் ஒன்றின் பாதுகாப்பு கமராவில் பதிவாகியிருந்த நிலையில் அதனை ஆதாரமாக கொண்டு குறித்த நபர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.



நாரம்மல பள்ளிவாயல் கல்வீச்சு ! சந்தேக நபர்கள் ஐவர் கைது.. நாரம்மல பள்ளிவாயல் கல்வீச்சு ! சந்தேக நபர்கள் ஐவர் கைது.. Reviewed by Madawala News on 8/27/2017 09:44:00 AM Rating: 5