Kidny

Kidny

மேலதிக ஹஜ் கோட்டாக்கள் தொடர்பிலான முக்கிய அறிவித்தல் ..


இலங்கைக்கான மேலதிக ஹஜ் கோட்டாக்கள் தொடர்பில் சவுதி ஹஜ் அமைச்சு உத்தியோகபூர்வ அறிவிப்பு இதுவரை வரவில்லை என அமைச்சர் ஹலீம் அவர்களின் பிரத்தியேக செயலாளர் பாஹிம் குறிப்பிட்டார்.


இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

மேலதிக ஹஜ் கோட்டாக்களை பெற்றுக்கொடுக்குமாறு முஸ்லிம் கலாசார அமைச்சர் சவுதி அரசாங்கத்திடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். இருந்த போதும் சவுதி அரேபிய அரசு இதுவரை இது தொடர்பில் எந்த வித உத்தியோகபூர்வ பதிலையும் எமக்கு தரவில்லை.

இந்த நிலையில் மேலதிக கோட்டாக்கள் தொடர்பில் எமது உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை எவரும் முகவர்களிடம் முற்பணமோ அல்லது கொடுப்பனவுகளையோ செலுத்த வேண்டாம் என நாம் பொதுமக்களிடம் வினயனாக கேட்டுக்கொள்கிறோம் என அவர் குறிப்பிட்டார்.

மேலதிக ஹஜ் கோட்டாக்கள் தொடர்பிலான முக்கிய அறிவித்தல் .. மேலதிக ஹஜ் கோட்டாக்கள் தொடர்பிலான முக்கிய அறிவித்தல் .. Reviewed by Madawala News on 8/20/2017 01:45:00 PM Rating: 5