tg travels

ஒருமாதத்தில் பத்தாயிரம் கிலோ மீட்டர் ஓடிய முதலமைச்சரின் வாகனம், கல்முனைக்கு எத்தனை தரம் வந்தது?


கிழக்குமாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அவர்கள் ஒரு கூட்டத்திலே உணர்ச்சிவசப்பட்டு பேசுகின்றார் தான் செய்த சேவைகளையும், தான் கொடுத்த தொழில் வாய்ப்புகளையும், தான் அமைத்த வீதிகளையும் சொல்லிக்காட்டி பெருமைபேசுகின்றார்.இதைப்போல் யாராலும் செய்யமுடியுமா என்று யாரையோ ஒருவரை மனதில் வைத்துக்கொண்டு சவால் விட்டு பேசுகின்றார்.

அதுமட்டுமல்ல நான் தூங்காமல் இரவு பகல் என்றும் பாராமல் சேவை செய்கிறேன், எனது வாகனம் ஒரு மாதத்துக்கு பத்தாயிரம் கிலோ மீட்டர் தூரம் எல்லா இடங்களுக்கும் ஓடுகிறது. அதற்கப்பால் எலிக்கெப்டரிலும் ஓடுகின்றேன். யாருக்காக ஓடுகின்றேன் மக்களுக்காக ஓடுகின்றேன் என்கிறார்.

அதேநேரம் என்னைத் தொடர்வு கொள்பவர்கள் இரவு பணிரெண்டு மணிக்குபிறகும், சுபஹுத் தொழுகைக்கு முன்னும் பின்னும் எத்தனைபேர் என்னைத் தொடர்வு கொண்டு பேசுகின்றார்கள் தெரியுமா என்று வேறு சவால் விட்டு பேசுகின்றார். இந்த பேச்சைக் கேட்க்கும் போது அம்பாரை மாவட்ட மக்களுக்கு புல்லரிக்கின்றது என்றுதான் சொல்லவேண்டும்.ஏனென்றால் நீங்கள் முதலமைச்சராக இருப்பதற்கு எங்களூர் மக்களும் காரணமல்லவா?

முதலமைச்சர் அவர்களே...! 

இந்த சேவைகளில் எத்தனை சேவைகளை அம்பாரை மாவட்டத்துக்கு குறிப்பாக கல்முனைக்கு செய்துள்ளீர்கள் என்று கூறமுடியுமா?

எத்தனை பேருக்கு தொழில்வாய்ப்புக்களை அம்பாரை மாவட்டத்துக்கு அல்லது கல்முனைக்கு வழங்கியுள்ளீர்கள் என்று கூறமுடியுமா?

உங்கள் வாகனம் மாதத்துக்கு பத்தாயிரம் கிலோமீட்டர் ஓடுவதாக சொல்கின்றீர்கள், அப்படியென்றால் கல்முனை பக்கம் எத்தனை தரம் வந்தீர்கள் என்றாவது சொல்ல முடியுமா?

நீங்கள் ஆட்சிக்கட்டிலில் இருப்பதற்கு முக்கியமாக வாக்களித்தவர்கள் இந்த பகுதி மக்கள் அல்லவா? உங்கள் ஊருக்கும் சேவை செய்யவேண்டும் அதில் தப்பில்லை, இருந்தாலும் எங்களூருக்கு உங்களால் செய்யப்பட்ட சேவைகளை சொல்லமுடியுமா?

கல்முனைக்கு கெபினட் அந்தஸ்துள்ள அமைச்சர்கள் இருந்து சேவை செய்த இடம் என்பதை எல்லோரும் அறிந்திருப்பீர்கள், ஆனால் இன்று அந்த மக்கள் "ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்" என்ற பழமொழிக்கு உயிர் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதையாவது அறிந்துள்ளீர்களா?

கல்முனை மக்கள் வாக்களித்து கண்டிக்கு சேவை செய்ய கெபினட் அமைச்சரை அனுப்பியுள்ளார்கள்.

அதே நேரம் கிழக்கு மாகாண முதலமைச்சரான உங்களையும் மற்ற ஊர்களுக்கு சேவை செய்ய அனுப்பியுள்ளார்கள். ஆனால் எங்களூர் மக்கள் மட்டும் வாயிலே விரலை வைத்து சூப்பிக்கொண்டுள்ளார்கள்.

ஆனால் நீங்களோ...

நீங்கள் செய்த சேவைகளை பற்றி மேடைகளிலே முழங்குகின்றீர்கள், அதனைப் பார்த்து நாங்கள் அழுவதா சிரிப்பதா அல்லது எங்கள் தலைவிதி இதுதான் என்று போர்த்திக்கு கொண்டு படுப்பதா என்று தெரியாமல் நிற்கிறோம்.

இதற்குள் நான் அல்லாஹுவுக்கு பதில் சொல்ல வேண்டும் என்றும் கூறிக்கொள்கின்றீர்கள், உங்களை அல்லாஹ் கியாமத் நாளில் விசாரிக்கும் போது நாங்களும் அங்கே நிற்போம்.

முதலமைச்சரே..! 

பார்த்து பேசுங்கள் எங்களுக்கும் வயிற்றெரிச்சல் என்ற ஒன்று உள்ளது என்பதை மறந்து பேசாதீர்கள், மறுமை நாள் உண்மை என்பதை நீங்களும் உங்கள் தலைவரும் மறந்து விடாதீர்கள். சதிகாரர்களுக்கெல்லாம் சதிகாரன் அல்லாஹ் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

அல்லாஹ் போதுமானவன்

எம்.எச்.எம்.இப்றாஹிம்

கல்முனை.

ஒருமாதத்தில் பத்தாயிரம் கிலோ மீட்டர் ஓடிய முதலமைச்சரின் வாகனம், கல்முனைக்கு எத்தனை தரம் வந்தது? ஒருமாதத்தில் பத்தாயிரம் கிலோ மீட்டர் ஓடிய முதலமைச்சரின் வாகனம், கல்முனைக்கு எத்தனை தரம் வந்தது? Reviewed by Madawala News on 8/29/2017 01:34:00 AM Rating: 5