Ad Space avaiable

நல்லாட்சிக்காக பதவியை தியாகம் செய்வது தொடர்பில் பெருமையாக உள்ளது !


நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டவும் நல்லாட்சியை நிலை நாட்டவுமே தான் தனது அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்வதாகவும்  பதவி துறப்பது தொடர்பில் நான் பெருமையடைவதாகவும் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயாக்க குறிப்பிட்டார்.


இன்று (10) பிற்பகல் 1 மணிக்கு விசேட உரையொன்றை பாராளுமன்றில் ஆற்றிய போது மேற்கண்ட விடயத்தை குறிப்பிடார்.

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர் தனது சொந்த விருப்பின் பேரில் தன்னுடைய அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக குறிப்பிட்ட அவர் எவரும் தனக்கு இதற்காக அலுத்தம் கொடுக்கவில்லை நா குறிப்பிட்டார்.

திறைசேரி முறிகள் மோசடி விவகாரத்தில், அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் தொடர்பு பட்டுள்ளார் என்று குற்றச்சாட்டி, திறைசேரி முறிகளை வழங்குதல் தொடர்காகப் பரீட்சித்துப் பார்க்கும் மற்றும் புலனாய்வு செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

இவற்றை, அடிப்படையாக வைத்தே அவர், தன்னுடைய அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

நல்லாட்சிக்காக பதவியை தியாகம் செய்வது தொடர்பில் பெருமையாக உள்ளது ! நல்லாட்சிக்காக பதவியை தியாகம் செய்வது தொடர்பில் பெருமையாக உள்ளது ! Reviewed by Madawala News on 8/10/2017 03:57:00 PM Rating: 5