Yahya

கையிலே வெண்ணெய்யை வைத்துக்கொண்டு நெய்யைத் தேடி அலையும் சாய்ந்தமருது மக்கள்...!சாய்ந்தமருது பிரதேசசபை விடயமாக ஏட்டிக்கு போட்டியான கட்டுரைகளை எழுதி அந்த ஊர் முந்தியா? இந்த ஊர் முந்தியா? என்று எழுதித் தள்ளுகிறார்கள் எழுத்தாளர்கள். இது எப்படி இருக்குதென்றால் கோழி முந்தியா? முட்டை முந்தியா? என்று கேட்பது போல் உள்ளது. 

இதற்கு முடிவு காண்பதை விட்டுவிட்டு இந்த கேள்விகள் எழக் காரணம் யார்? என்று யோசித்துப் பார்க்கவேண்டும்.

சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தது யார்?

1987ம் ஆண்டு ஊர்கள் எல்லாம் ஒன்றாக்கப்பட்டு பிரதேசசபையாக மாற்றப்பட்டபோது சாய்ந்தமருது மக்கள் அதற்கு எதுவித எதிர்ப்பையும் காட்டவில்லை, அதற்கு அன்றிருந்த அரசியல்வாதிகளின் செயல்பாடுகளும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

ஆனால் இன்று எங்களுக்கு தனிப் பிரதேசசபைதான் வேண்டும் என்று அவர்கள் ஒற்றைக்காலில் நிற்பதற்கு என்ன காரணம் என்று நிதானமாக சிந்தித்தால் விடை கிடைத்துவிடும்.

சாய்ந்தமருது மக்கள் பிரதேசசபை என்ன அதற்கு மேல் பெறுவது என்றாலும் அவர்கள் நினைத்தால் பெறலாம், அது அவர்களின் கையிலேதான் உள்ளது அதனை அவர்கள் பயன்படுத்தாமல் இருப்பதன் நோக்கம் புரியாத புதிராகவே இருக்கின்றது.


இருந்தாலும் கடந்த தேர்தல் காலங்களில் சாய்ந்தமருது மக்கள் ஊர்ப்பாகுபாடு என்பதையும் மீறி கட்சிதான் எங்களுக்கு முக்கியம் என்று நினைத்து, அவர்கள் விரும்பும் கட்சிக்கு நூறுவீதம் வாக்கு பண்ணி வருகின்றார்கள். அப்படிப்பட்டவர்கள் கட்சி யாருக்கு வாக்குபண்ணச் சொல்லுகிறதோ அவர் யார்? அவர் எந்த ஊரைச்சேர்ந்தவர்? என்றும் பார்க்காமல் கட்சி யாரைநோக்கி கைநீட்டுகின்றதோ அவருக்கு வாக்குபண்ணுபவர்களாக இருந்து வருகின்றார்கள்.


சாய்ந்தமருதுதான் கட்சிக்காக நூறு வீதம் வாக்களிக்கும் ஊராகும், அந்த மக்கள் ஏதோ ஒருகாரணத்துக்காக முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிர்த்து வாக்களித்தால் மு.காங்கிரஸ் மட்டுமல்ல அதன் தலைமைத்துவமே ஆட்டம் காணும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை எனலாம். தேர்தல் காலங்களில் மு.காங்கிரஸ் எங்கே தோற்றாலும் தாக்கம் காட்டாது, ஆனால் தலைவர் அஸ்ரப் பிறந்த மண்ணான கல்முனைத் தொகுதியில் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டால் மு.காங்கிரஸின் ஆட்டஓட்டமெல்லாம் நின்றுவிடும் என்பது நாடே அறிந்த உண்மையாகும்.


அந்த வகையில் மு.காங்கிரஸின் மானம் மறியாதை எல்லாம் இந்த ஊர்மக்களின் கைகளில்தான் உள்ளது என்பதை இந்த ஊர்மக்கள் இன்னும் புரிந்ததாக தெறியவில்லை. அதன் காரணமாகத்தான் அதாவுள்ளாவாக இருந்தாலும் சரி, ரிசாட்டாக இருந்தாலும் சரி, மயோன் முஸ்தபாவாக இருந்தாலும் சரி அவர்கள் சாய்ந்தமருதூறை இலக்கு வைத்தார்கள்.

அப்போதெல்லாம் "அடைந்தால் மகாதேவி அடையாது விட்டால் மரணதேவி" என்பதுபோல் அடைந்தாலும் அடையாது விட்டாலும் மு.காங்கிரஸிதான் எங்கள் உயிர் மூச்சியென்று வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்தான் சாய்ந்தமருது மக்களாவார்கள்.


அவர்கள் நினைத்தால் யாருக்காவது வாக்களித்து அவர்மூலம் சகல விடயங்களையும் பெறலாம், ஆனால் அவர்கள் அப்படிச்செய்யாமல் கட்சிதான் எங்கள் மூச்சி என்று நிற்பதனால், அந்த கட்சியே அவர்களை குழிதோன்றிப் புதைக்கின்றது என்பதை அவர்கள் கவணிக்க தவறி வருகின்றார்கள்.


#மயோன் முஸ்தபா சாய்ந்தமருது என்று தெறிந்தும் அந்த மக்கள் அவருக்கு வாக்குப்பன்னுவதை தவிர்த்தார்கள்.


#அதாவுள்ளா நியமித்த பசீர் அதிபர் அவர்கள் தங்களது ஊர் என்று தெறிந்தும் அவரையும் தோற்கடித்தார்கள்.


#அதாவுள்ளா பிரதேசசபை தறுகிறேன் என்று வந்தபோதும் அதற்கும் ஆர்வம் காட்டாமல் கட்சிதான் முக்கியம் என்று நின்றார்கள்.


#அதாவுள்ளா சாய்ந்தமருதூர் மக்களுக்கு பல சேவைகளை செய்து கொடுத்துவிட்டு வாக்குகேட்டு வந்தபோது அவருக்கும் வாக்கு போட மறுத்தார்கள்.


#சிராஸ் மீராய்வு கட்சி மாறி வந்தபோதும் ஆதரிக்க மறுத்தார்கள்.


இப்படிப்பட்ட சிந்தனையுடன் உள்ள இவர்களை உசிப்பேற்றியதுயார்?


கடந்த மாநகரசபை தேர்தலில் சாய்ந்தமருது மக்கள் மேயரை நாம்தான் பெறவேண்டும் என்று திட்டமிட்டு செயல்படவில்லை, மாறாக கட்சியின் தலைவர் அதிகூடிய வாக்கெடுப்பவர் மேயராகலாம் என்று கூறியுள்ளதாக கதைபரப்பப்பட்ட போது அதனை நம்பி ஒட்டு மொத்தமாக வாக்களிக்க தூண்டப்பட்டார்கள்.


அந்த நேரம் இந்த கட்சியின் தலைமை, அப்படியல்ல யார் அதிகூடிய வாக்குகள் எடுத்தாலும் கட்சியின் மூத்த உறுப்பினர் என்றவகையிலும், படித்தவர் என்றவகையிலும், மறைந்த தலைவரின் சொந்தக்காரர் என்றவகையிலும், கட்சி வெற்றியடைந்தால் நிசாம் காரியப்பர்தான் மேயர் என்று அறிவித்திருந்தால் அதனை யாரும் பிழை என்று கூறியிருக்கமாட்டார்கள்.


தலைமையின் கட்டளையை சிரம்மேல் கொண்டு சாய்ந்தமருது மக்களும் நிசாம் காரியப்பருக்கே வாக்களித்திருப்பார்கள், காரணம் அவர்களின் ஊரைவிட கட்சிதான் முக்கியம் என்று அவர்கள் நினைப்பதனாலாகும்.


நிசாம் காரியப்பர்தான் மேயர் என்று தலைமை கூறியிருந்தால், அதனை கட்சியில் புதிதாக சேர்ந்த சிராஸ் மீராசாய்வு அவர்களும் அந்த நேரம் எதிர்த்திருக்கவும் மாட்டார்.


இப்படியான நிலையில் கட்சியின் கண்டி தலைமை ஏதோ ஒன்றை மனதில் வைத்துக்கொண்டு தீர்க்கமான முடிவை மக்களுக்கு அறிவிக்காமல் நாடகமாடிய விடயத்தை சாய்ந்தமருது மக்களும் இதர ஊர் மக்களும் அறிந்திருக்க நியாயமில்லை. ஆனால் இந்த கட்சியில் உள்ள மற்ற முக்கிய உறுப்பினர்கள் கண்டி தலைவரின் திட்டத்தை நன்றாகவே அறிந்திருந்தனர். ஏன் நிஸாம் காரியப்பர் கூட இந்த சதி திட்டத்தை நன்றாகவே அறிந்திருந்தார்.

(என்ன சதிதிட்டம் என்பதை வேறொரு கட்டுரையில் விரிவாக தறுகின்றேன்).


அந்த திட்டத்துக்கு உரம் போடுவது போன்றுதான் கல்முனையின் கட்சியின் முக்கியஸ்தர்களான ஹரீஸ், ஜவாத், ஜெமில், முழக்கம் மஜீட் போன்றோர் அந்த நேரம் ஏட்டிக்கு போட்டியாக செயல்பட தலைமையினால் தூண்டப்பட்டார்கள் என்பதை எத்தனை பேர் அறிந்தார்களோ தெறியாது.


எதுஎப்படியோ தேர்தல் முடிந்த கையோடு அதிகூடிய வாக்கெடுத்த சிராஸ் மீராசாய்வு அவர்கள் மேயராக தெறிவு செய்யப்பட்டார். கண்டி தலைவர் எதிர்பார்த்ததை போல் அன்றைய சூழலில் நிசாம் காரியப்பரும் அவருடைய ஆதரவாளர்களும் பட்ட துன்பத்தையும், கஷ்டத்தையும் நாம் அறிவோம்.


அந்த வேதனையின் வெளிப்பாடுதான் தேர்தலின் பின் கல்முனைக்குடி பெரிய பள்ளிவாசலுக்கு முன் நடந்த பொதுக்கூட்டத்தில் நிசாம் காரியப்பர் இந்த தலைமையை நோக்கி ஒரு சாபமே விட்டார், "கடாபிக்கு நடந்த கதிதான் இந்த சதிகார தலைவருக்கும் நடக்கும் என்று"


இந்த நேரத்தில்தான் அப்போதுதான் படுத்துக்கிடந்து எழும்பி வந்தவர்போல் கண்டி தலைவர் ஹக்கீம் அவர்கள் நியாயம் செய்பவர்போல் நாடகமாடி, இரண்டு வருடங்களுக்கு சிராஸும், மற்ற இரண்டு வருடங்களுக்கு நிஸாமும் என்று தீர்ப்பு வழங்குகின்றார். இந்த தீர்ப்பு ஹக்கீமின் முன்னய தீர்ப்புகளைப்போல்தான் இருக்கும்மென்று சிராஸ் அவர்கள் நினைத்துக் கொண்டு, நாம்தான் தொடர்ந்தும் மேயராக இருப்போம் என்ற நினைப்பில் ஓடியாடி சேவைகளைச் செய்தார் என்பதும் நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.


சிராஸ் மீராசாய்வின் நடவடிக்கைகள் தலைவருக்கு வயிற்றைக் கலக்கும் நிலையை உண்டாக்கியபோதுதான், எதிலும் கொடுத்த வாக்கை காப்பாற்ற என்னாத ஹக்கீம் அவர்கள் இந்த விடயத்தில் அரிச்சந்திரனைப்போல் நடப்பதாக காட்டிக்கொண்டார்.

இதில் விசேசம் என்னவென்றால் ஆரம்பத்தில் மேயர் பதவி கேட்டு நிஸாம் காரியப்பர் அவர்களும், அவரது ஆதரவாளர்களும் முயற்சித்தது உண்மையாக இருந்தாலும், பின்னாலில் அதன் மீது கரிசணை செலுத்துவதை அவர்கள் தவிர்த்தே வந்தார்கள். காரணம், சொன்னது போல் தலைவர் நடக்க மாட்டார் அது முடிந்தகதைதான் என்று என்னியதே அதற்கு காரணமாகும். கல்முனைக்குடி மக்களும் அதனைப்பற்றி சிந்திக்கவே இல்லை.


இந்த நேரத்தில்தான் அரிச்சந்திரன் பரம்பரையை சேர்ந்த தலைவர் ஹக்கீம் அவர்கள் நூந்து போய்கிடந்த விடயத்தை தூக்கிபிடித்து இரண்டுவருடங்கள் முடிந்து விட்டது சொன்னதுபோல் பதவியை நிஸாம்காரியப்பரிடம் கொடுங்கள் என்றபோதுதான் பூகம்பமே வெடித்தது எனலாம்.


இதன் மூலம் தலைவர் சாதித்தது என்ன? என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை, ஆனால் சாய்ந்தமருது மக்களை சிந்திக்கவைத்து விட்டார் என்பது மட்டும் உண்மையாகும். அதன் பிறகு தலைவரையும் கட்சியையும் பழிவாங்கும் என்னத்தோடு சிராஸ்மீராசாய்வு அவர்கள் கையில் எடுத்த ஆயுதம்தான் சாய்ந்தமருதுக்கான தனியான பிரதேசசபை வேண்டும் என்ற கோரிக்கையாகும்.


முன்பும் இந்த கோரிக்கை இருந்துவந்தாலும், மும்முறமாக பேசப்பட்டது இவருடைய போராட்டத்துக்கு பின்புதான். அதன் பிற்பாடு இதில் நாமும் லாபம் அடைந்து விடலாம் என்று ரிசாட் அமைச்சர் அவர்களும் இப்போது காய்நகர்த்தி வருகின்றார்கள். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பதுபோல் உள்ளது இவர்களின் செயல்பாடு.


எது எப்படியிருந்தாலும் சாய்ந்தமருது மக்களின் நியாயமான கோரிக்கையும், அதன் மூலமாக கல்முனைக்குடி மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளையும் கவணத்தில் எடுத்து தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் நியாயமாகும்.

இந்த விடயத்தில் யாரும் மனம் நோகும்படி நடந்து கொள்ளக்கூடாது என்பதே இரு ஊர் மக்களின் விருப்பமுமாகும்.


ஆகவே, சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தவர்கள் யார்? என்று மக்கள் இனம் கண்டு அவர்களுக்கு தக்கபாடம் படிப்பித்து கொடுக்கவேண்டும். அரசியல் ஆதாயத்துக்காகவும் தனக்கு எதிராக யாரும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவும், ஒருவரோடு ஒருவரை மோதவிட்டு அரசியல் ஆதாயம் தேடும் விடயத்தில் பாதிக்கப்படுவது எங்களூர் மக்கள்தான் என்பதை நாம் அறிந்து கொள்ளவேண்டும்.

அரசியல் லாபத்துக்காக நாடகமாடும் தலைவர் ஹக்கீம் அவர்கள் இதன் கூலியை வெகுவிரைவில் பெறப்போகின்றார் என்பதே உண்மையாகும்.


இதற்குள் சகோதரர்களாக உள்ள இரு ஊர் மக்களும் ஏட்டிக்கு போட்டியாக எதைஎதையோ எழுதிக்கொண்டு மனவேதனைப்படுவதை விட இதற்கு தூபமிட்ட கட்சி தலைவரான ஹக்கீம் அவர்களுக்குத்தான் தண்டனை வழங்க முற்படவேண்டும் என்பதே எங்கள் கருத்தாகும்.


எம்.எச்.எம்.இப்றாஹிம்

கல்முனை.

கையிலே வெண்ணெய்யை வைத்துக்கொண்டு நெய்யைத் தேடி அலையும் சாய்ந்தமருது மக்கள்...! கையிலே வெண்ணெய்யை வைத்துக்கொண்டு நெய்யைத் தேடி அலையும் சாய்ந்தமருது மக்கள்...! Reviewed by Madawala News on 8/20/2017 08:53:00 PM Rating: 5