tg travels

தனது திருட்டை மறைக்க ரவி புத்தரை,இயேசுவை,குர்ஆனை உதவிக்கு அழைத்துள்ளார்..

தனது திருட்டை மறைப்பதற்காக ரவி கருணாநாயக்க அல் குர்ஆனின் வசனங்களை உதவிக்கு அழைத்துள்ளமை மிகவும் மோசமான செயற்பாடு என அனுர குமார திஸாநாயக்க விமர்சித்துள்ளார்.

செய்யும் திருட்டை செய்துவிட்டு புத்த பொருமானின் போதனைகளையும்,ஏசு கிரிஷ்துவின் வாழ்கையையும் , அல் குர்ஆன் வசனங்களையும் ஒரு மகா திருடன் தனது திருட்டை மறைக்க உதவிக்கு அழைத்துள்ளமை கேவலமான செயலாகும்.  

இன்று மாலை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்ட விமர்சனத்தை வெளியிட்டார்.

முன்னதாக பினைமுறி மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க 

பாராளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை ஆற்றிய அவர் பதவி விலகுவதாக அறிவித்தார்.

தான் பதவி விலகுவது தொடர்பில் கவலைப்படவில்லை என்றும் இந்த சபைக்கு கௌரவமளித்து தனது பதவி விலகுவதில் பெருமைப்படுவதாகவும் ரவி கருணாநாயக்க தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

‘நிச்சயமாக சத்தியம் வென்றே தீரும் அசத்தியம் அழிந்தே தீரும்’ என்ற புனித குர்ஆன் வசனத்தின் படி நிச்சயம் சரியான தீர்வு கிடைக்கும் என்று அமைச்சர் ஆற்றிய உரையில் அவர் கூறியிருந்த நிலையில் அனுர குமார இவ்வாறு விமர்சனம் வெளியிட்டுள்ளார்.

தனது திருட்டை மறைக்க ரவி புத்தரை,இயேசுவை,குர்ஆனை உதவிக்கு அழைத்துள்ளார்.. தனது திருட்டை மறைக்க ரவி புத்தரை,இயேசுவை,குர்ஆனை உதவிக்கு அழைத்துள்ளார்.. Reviewed by Madawala News on 8/11/2017 01:27:00 AM Rating: 5