Ad Space avaiable

தேசிய ஷூறா சபை ஏற்பாட்டில் ஊடக திட்டமிடல் அமர்வு


தேசிய ஷூறா சபையின் ஊடகத் துறைக்­கான உப குழு ஏற்­பாடு செய்த முஸ்லிம் ஊட­க­வி­ய­லா­ளர்கள் மற்றும் சிவில் சமூக செயற்­பாட்­டா­ளர்­க­ளு­ட­னான கலந்­து­ரை­யாடல் மற்றும் திட்­ட­மிடல் அமர்வு கடந்த வாரம் கொழும்­பி­லுள்ள ஜம்­இய்­யதுஷ் ஷபாப் கேட்போர் கூடத்தில் இடம்­பெற்­றது.


இலங்­கையில் இயங்கும் முஸ்லிம் ஊட­கங்கள் மற்றும் முஸ்லிம் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளி­டையே ஒருங்­கி­ணைப்பை ஏற்­ப­டுத்தி அவர்­களை மேலும் வலுப்­ப­டுத்தும் நோக்கில் ஏற்­பாடு செய்­யப்­பட்ட இந் நிகழ்வில் சுமார் 60 க்கும் மேற்­பட்ட ஊட­க­வி­ய­லா­ளர்­களும் சிவில் சமூக பிர­மு­கர்­களும் கலந்து கொண்­டனர். 


தேசிய ஷூறா சபையின் உப தலை­வரும் ஊடக உப குழுவின் தலை­வ­ரு­மான அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பளீல் (நளீமி) இந் நிகழ்­வுக்குத் தலைமை வகித்­த­துடன் அறி­முக உரை­யையும் நிகழ்த்­தினார். விடி­வெள்ளி பத்­தி­ரி­கையின் ஆசி­ரியர் எம்.பி.எம். பைறூஸ் ஊட­கத்­து­றை­யி­லுள்ள சவால்­களும் வாய்ப்­பு­களும் எனும் தலைப்பில் உரை நிகழ்த்­தினார். 


இந்த நிகழ்வின் அவ­சியம் தொடர்­பிலும் இலங்­கையில் முஸ்லிம் ஊட­கங்­களின் சம­கால நிலை தொடர்­பிலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலை­வரும் நவ­மணி பத்­தி­ரி­கையின் பிர­தம ஆசி­ரி­ய­ரு­மான என்.எம். அமீன் உரை நிகழ்த்­தினார்.


இரண்­டா­வது அமர்வில் பங்­கு­பற்­று­னர்கள் அச்சு, இலத்­தி­ர­னியல், சமூக. ஊடகம் என மூன்று குழுக்­க­ளாக பிரிக்­கப்­பட்டு கலந்­து­ரை­யா­டல்கள் நடை­பெற்­ற­துடன், கலந்­து­ரை­யா­டப்­பட்ட அம்­சங்கள் தொடர்­பாக முன்­மொ­ழி­வு­களும் இடம்­பெற்­றன. 


இதன்­போது இலங்­கையில் முஸ்லிம் ஊட­கங்­களின் சம­கால நிலை, அவை எதிர்­கொள்ளும் சவால்கள், அவற்றை எதிர்­கொள்­வ­தற்­கான வழி­மு­றைகள் தொடர்பில் விரி­வாக ஆரா­யப்­பட்­டன. இந்த நிகழ்வை நொலேஜ் பொக்ஸ் ஊடக நிறு­வ­னத்தின் பணிப்பாளர் அஷ்கர் கான் நடத்­தி­வைத்தார்.


இந்த நிகழ்வின்போது முன்­வைக்­கப்­பட்ட அபிப்­பி­ரா­யங்­க­ளையும் கலந்­து­ரை­யா­டப்­பட்ட அம்­சங்­க­ளையும் அடிப்­ப­டை­யாகக் கொண்டு திட்ட முன்­மொ­ழி­வொன்­றையும் மூலோ­பாயத் திட்­ட­மொன்­றையும் வரைந்து எதிர்­கால நட­வ­டிக்­கை­களை முன்­கொண்டு செல்­வது எனத் தீர்­மா­னிக்­கப்­பட்­ட­துடன் அச்சு, இலத்­தி­ர­னியல் மற்றும் சமூக ஊட­கங்­க­ளுக்­கென தனித்தனியான செயற் குழுக்களும் அமைக்கப்பட்டன.


தேசிய ஷூரா சபையின் ஊடக உப குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரமும் தனது பூரணமான ஒத்துழைப்பை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

தேசிய ஷூறா சபை ஏற்பாட்டில் ஊடக திட்டமிடல் அமர்வு தேசிய ஷூறா சபை ஏற்பாட்டில் ஊடக திட்டமிடல் அமர்வு Reviewed by Madawala News on 8/07/2017 01:09:00 AM Rating: 5