Yahya

மலாலாவுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய மேற்குலகம், பர்மா முஸ்லிம்களின் மீது கரிசனையின்றி இருப்பது ஏன்?

மேற்குலகம் மலாலா மீது கடும் கரிசனை செலுத்தியது மட்டுமல்ல உலகத்தின் உயர்ந்த விருதான நோபல் பரிசையும் வழங்கியது. இதன் மூலம் முஸ்லிம் சமுதாயத்தின் மீது நாங்களும் அன்பாய்த்தான் இருக்கின்றோம் என்ற பொய்யான கரிசனையொன்றை மேற்குலகத்தினர் காட்ட முனைகின்றனர் என்பதே உண்மையாகும்.


பர்மா, சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் பெரியவர்கள் மட்டுமல்ல சிறுவர்கள் கூட முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே வகைதொகையின்றி கொல்லப்படுகின்றார்கள், அதனையெல்லாம் கண்டுகொள்ளாத இந்த மேற்குலக நாடுகள், மலாலாவிடம் மட்டும் கரிசனை காட்டியதன் நோக்கம் என்னவென்று நாம் சிந்திக்கவேண்டும்.


மலாலா பிறந்த இடம் பாக்கிஸ்தானின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கு என்ற ஊரிலாகும். அவர் பிறந்தது 1997 ஜுலை.

அவருடைய தகப்பனார் ஜியாவுத்தீன் யுசுப்சாய் "குசால்" என்ற கலவன் பாடசாலை ஒன்றை நடத்திவந்தார்.


அந்தப்பகுதியில் போராட்டம் நடத்திவரும் தலிபான்கள்(மாணவர்கள்) மலாலாவின் அப்பா நடத்திவரும் கலவன் பாடசாலைக்கு சில கட்டுப்பாடுகளை விதித்தார்கள். ஆண் பெண் ஒன்றாக இருந்து பாடம் படிக்க முடியாது என்றும், பர்தா அணிந்துதான் பெண்கள் பாடசாலைக்கு வரவேண்டும் என்றும், ஆடல் பாடல்கள் இருக்கக்கூடாது என்றும் தடைவிதித்தார்கள்.

மற்றும் படி படிப்பதற்கு எந்த தடையும் அவர்களினால் விதிக்கப்படவில்லை.


இந்த நேரத்தில்தான் மலாலாவின் அப்பா ஜியாவுதீனினாலும், அவருடைய அம்மா துர்பக்காய் அவர்களினாலும் நடத்தப்பட்டு வந்த கலவன் பாடசாலைக்கு தலிபான்களினால் ஒரு திகதி குறிப்பிடப்பட்டு அந்த திகதிக்குள் நாங்கள் சொல்வது போல் நடந்து கொள்ளவேண்டும் அல்லது பாடசாலையை மூடிவிடவேண்டும் என்ற எச்சரிக்கையொன்றை இடுகின்றார்கள்.


அதன் பிற்பாடு அந்தபாடசாலைக்கு மாணவிகளின் வரவுகள் குறைய ஆரம்பித்திருந்தது. இந்த நேரத்தில்தான் "குல்மக்காய்" என்ற புனைப்பெயரில் மலாலா எழுதியதாக ஒரு செய்தி இணையத்தில் பறவுகின்றது. 

2009ஜனவரி 3 அன்று 

எனக்கு பயமாக இருக்கிறது என்ற தலைப்போடு சில செய்திகள் இணையத்தில் பதியப்பட்டிருந்தது.

இப்படி ஒவ்வொரு நாளும் குல்மக்காய் என்ற புனைப்பெயரில் செய்திகளை பதிவேற்றம் செய்து கொண்டிருந்த போதுதான். 


பி.பி.சி போன்ற உலக செய்தி தளங்கள் அதனை தட்டச்சி செய்து வெளியிட்டது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன் படுத்த நினைத்த மேற்குலகம் யார் இந்த குல்மக்காய் என்று தேடத் துவங்கியது.

அதற்காக பாக்கிஸ்தானிய செய்தியாளர் இர்பான் அஸ்ரப் துணையோடு நியுயோர்க் டைம்ஸ் இதழக்கான பெஷாவரின் செய்தி சேகரிப்பாளர் ஆடம் எலிக் என்பர் ரகசியமான முறையில் தலிபான்களுக்கு தெறியாமல் ஸ்வாட் பள்ளத்தாக்குக்கு செல்கின்றார்கள்.


அங்கே மலாலாவின் தந்தையிடம் விசாரித்தபோது அது தனது மகள் மலாலா என்பதை தெறியப்படுத்துகின்றார். (உண்மையிலேயே தன்னுடைய கலவன் பாடசாலைக்கு தடைவிதித்தன் காரணத்தினால் மலாலாவின் தந்தைதான் இணையதளத்தில் புனைப்பெயரில் எழுதிவந்தார் என்றும் கூறப்படுகிறது.) பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக தனது சிறிய மகளை இதற்கு உரிமை கோர வைத்தால் உலகத்தில் அனுதாபத்தை பெறலாம் என்றுதான், இந்த கருத்துக்கள் எனது மகள் மலாலாவினுடையது என்று கூறியிருந்தாராம்.


அதன் பிற்பாடு எங்கள் பகுதியில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதால் தொடர்ந்து எங்களுக்கு எழுதி அனுப்பமுடியாது என்ற கருத்தையும் முன்வைத்தபோது. நீங்கள் கைபேசி மூலம் வானொலி அறிவிப்பாளர் அப்துல் ஹாய் கக்கார் அவர்களுக்கு குரல் வடிவத்தில் தெறிவியுங்கள் அதனை நாங்கள் தட்டச்சி செய்து உங்கள் பெயரில் வெளியிடுவோம் என்று கூறியுள்ளனர்.


அதன் பிற்பாடு அவருடைய வரிகளுக்கு இன்னொரு சிறுமியின் குரலை பதிவு செய்து பி.பி.சியில் ஒலிபரப்பினார்கள். அதன் பிற்பாடு அவருடை செய்திகள் உலகம் முழுக்க பரவத்துவங்கியது.

இதனை மேற்குலகம் இஸ்லாத்திற்கு எதிராக பயன்படுத்த திட்டமிட்டனர்.


இஸ்லாமிய மார்க்கம் பெண்கள் கல்வி கற்பதை தடைசெய்கின்றது, அதன் மூலம் பெண்களை அடிமைப்படுத்த நினைக்கின்றது என்பன போன்ற பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு இந்த செய்திகளை ஆதாரமாக காட்டமுனைந்தார்கள் மேற்குலக மன்னர்கள்.


அதற்கு இடம் எடுத்துக்கொடுப்பதுபோலவே தலிபான்களால் மலாலா 2012ம் ஆண்டு அச்சுறுத்தும் நோக்கத்தோடு சுடப்படுகின்றார். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் நோக்கத்தோடு மலாலாவுக்கு உயர் சிகிச்சை வழங்குவதாக கூறி இங்கிலாந்து அழைத்துச் சென்றனர். அதன் பின் என்ன நடைபெற்றது என்பதை நாம் அறிந்து வருகின்றோம்.


மலாலாவுக்கும் அவரது தந்தைக்கும் தலிபான்களினால் அச்சுறுத்தல் விடப்பட்டது பெண்கள் கல்வி கற்ககூடாது என்பதற்காக அல்ல, மாறாக அவருடைய கலவன் பாடசாலையை நிறுத்திவிட்டு, இஸ்லாமிய கலாச்சாரத்தை பேணுமுகமாக இருபாலாரும் தனித்தனியாக கல்வி கற்க ஏற்பாடுகள் செய்யுமாறும்தான் கூறியிருந்தார்கள்.


அதனை வேறுமாதிரி திருத்திக்கூறி, அதனை இஸ்லாம் மார்க்கத்துக்கு எதிராக பயன்படுத்தவே மேற்குலகம் பாடாய்ப்பட்டு வருகின்றது.

இன்று இஸ்லாம் வேகமாக பரவிவருகின்றது என்ற காரணத்துக்காக, இதனை தடுப்பதற்கு பலாத்காரத்தை பயன்படுத்துவதை விட இப்படியான மறைமுகமான வழிகளை பின்பற்றி வருகின்றார்கள் மேற்குலக ஜாம்பவான்கள்.


இஸ்லாம் தற்போதைய நவீன காலத்துக்கு சரிப்பட்டு வராத ஒன்று என்றும், அது தீவிர வாதத்தைத்தான் ஊக்குவிக்கின்றது என்றும், அது பெண்களை சரியா சட்டம் என்ற போர்வையில் அடக்கி ஒடுக்குகின்றது என்றும், பொய்யான பிரச்சாரத்தை செய்வதற்கு இப்படியான செயல்பாடுகளை ஆதாரமாக காட்ட முனைகின்றனர்.

இதன் மூலம் இஸ்லாத்தை படித்து ஏற்றுக்கொள்ளும் மற்ற சமூக மக்களை தடுப்பதற்காகவே இதனை பயன்படுத்துகின்றார்கள். அதற்காக இப்படியான விடயங்கள் எங்கு நடந்தாலும் அங்கே தலையைப் போட்டு நாடகமாடுகின்றார்கள்.


உலகத்திலே மலாலாவுக்கு ஏற்பட்ட தீமையைவிட, மிக மோசமான செயல்கள் எல்லாம் நடக்கின்றன அதனையெல்லாம் இந்த மேற்குலகம் கண்டுகொள்வதில்லை, ஆனால் மலாலா விடயத்தில் மட்டும் இப்படி கவணம் செலுத்துவதானது அவர்களுடைய இஸ்லாத்திக்கு எதிரான காழ்ப்புணர்ச்சியைத்தான் காட்டுகின்றது.


முஸ்லிம்களின் மனதை புண்படுத்தும் விதமாக நாவல் எழுதிய சல்மான் ருஷ்த்திக்கு எதராக முஸ்லிம்கள் எதிர்ப்பு காட்டியபோது, அந்த உணர்ச்சிகளுக்கு அனுதாபத்தையும் காட்டுவதற்கு பதிலாக, எழுத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் ருஷ்த்திக்கு பாதுகாப்புதான் வழங்கியிருந்தார்கள்.


அதுமட்டுமல்ல வங்களாதேஷ் முஸ்லிம் பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் மனிதகுலத்துக்கே தலைகுனிவை ஏற்படுத்தும்விதமாக, பெண்களுக்கு கற்ப்பபை சுதந்திரம் வேண்டும் என்று எழுதினார். அவருக்கும் எழுத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் பாதுகாப்பை வழங்கி கௌரவபடுத்தியது இந்த மேற்குலகம்.


யார் யாரெல்லாம் இஸ்லாத்துக்கு எதிராக பேசுகின்றார்களோ அவர்கள் முஸ்லிம்களாக இருந்துவிட்டால் போதும், அவர்களுக்கு செங்கம்பல வரவேற்பு கொடுத்து வரவேற்பதுதான் இவர்களின் வேலையாக இருக்கின்றது. 

ஆகவே, அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் இஸ்லாத்தின் வளர்ச்சியை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்ற நோக்கில் பல சதித்திட்டங்களை மறைமுகமாக செய்துவருகின்றார்கள், இவர்களிடமிருந்து முஸ்லிம்கள் நீதியை எதிர்பார்க்கமுடியாது என்பதே எமது கருத்தாகும்.


மலாலாவுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய மேற்குலகம், பர்மா முஸ்லிம்களின் மீது கரிசனையின்றி இருப்பது ஏன்? மலாலாவுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய மேற்குலகம், பர்மா முஸ்லிம்களின் மீது கரிசனையின்றி இருப்பது ஏன்? Reviewed by Madawala News on 8/30/2017 04:31:00 PM Rating: 5