Kidny

Kidny

ஈரானிய தூதுவர் - அமைச்சர் ரவூப் ஹக்கீம் சந்திப்பு.


ஈரானிய தூதுவர் முஹம்மட் செய்ரி அமிரானி, தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் ஐயூப் ஹேதாரி மற்றும் நகரதிட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இடையில் சந்திப்பு இடம்பெற்றது.


பாராளுமன்ற கட்டிடத்தில் நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பில் இரு தரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இதன்போது , உமாஓயா திட்டத்தின் விளைவாக ஏற்பட்டிருக்கும் தவறான கருத்து தொடர்பில் நாட்டு மக்களை தெளிவுபடுத்தும் நோக்கத்துடன் இலங்கை - ஈரான் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் ஊடாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது பெரிதும் பயனளிக்குமென்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தினார்.

மேலும், நீர் மற்றும் சுகாதார துறையில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்தும் இதன்போது ஈரான் தூதுவர் கவனம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பில் ஈரான் நாட்டின் பிரதித்தூதுவர் எண்ரியஸ் பேர்க்கும் கலந்துகொண்டார்.

 

ஈரானிய தூதுவர் - அமைச்சர் ரவூப் ஹக்கீம் சந்திப்பு. ஈரானிய தூதுவர் - அமைச்சர் ரவூப் ஹக்கீம் சந்திப்பு. Reviewed by Madawala News on 8/23/2017 10:14:00 AM Rating: 5