Kidny

Kidny

ரவி மீதான குற்றச்சாட்டு சின்ன விஷயம் ; மன்னாரில் ராஜித தெரிவிப்பு ..


அமைச்சர் ரவி கருணாநாயக்கவை திருடராக சித்தரிக்கும் கூட்டு எதிர்கட்சியினர் மகா திருடர்கள் என அமைச்சர் ராஜித குறிப்பிட்டார்.


மன்னார் சிலாவதுரை பிரதேசத்தில் இடம்பெற்ற வைத்தியசாலை புதிய கட்டிட திறப்பு விழா நிகழ்வில் உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,

ரவி கருணாநாயக்க தொடர்பாக குற்றம் சாட்டப்படும் திருட்டு ஒரு சில்லறை திருட்டாகும் மொத்தமாக மோசடி செய்தவர்கள் பலர் இங்கு இருக்கிறார்கள்.

அமைச்சர் ரவி கருணாநாயக்கவை திருடராக சித்தரிக்கும் கூட்டு எதிர்கட்சியினர் மகா திருடர்கள்.அவர்களின் டுபாய் வங்கி கணக்கு தொடர்பில் மக்காள் அவதானம் செலுத்தி அறிந்துகொள்ளவேண்டும். அந்த டுபாய் வங்கி கணக்கில் இரு பில்லியன் டொலர் உள்ளது. இன்னும் ஒருவரின் வெளிநாட்டு வங்கிக்கணக்கில் 500 மில்லியன் டொலர் உள்ளது.

ரவி கருணாநாயக்க தொடர்பில் குற்றம் சுமத்துவர்கள் மஹா திருடர்கள் திருடர்கள் இந்த விடயம் தொடர்பில் பேசுவது வேடிக்கையானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரவி மீதான குற்றச்சாட்டு சின்ன விஷயம் ; மன்னாரில் ராஜித தெரிவிப்பு .. ரவி மீதான குற்றச்சாட்டு சின்ன விஷயம் ; மன்னாரில் ராஜித தெரிவிப்பு .. Reviewed by Madawala News on 8/07/2017 04:46:00 PM Rating: 5