Kidny

Kidny

பிரதமருக்கு ஆசி வேண்டி திருகோணமலையில் நாளை சர்வமத பிரார்த்தனை ..


பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் மக்கள் சேவைக்காக அரசியலில் தடம்பதித்து 40 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளது.இதனை முன்னிட்டு நாளை 7 மணி தொடக்கம் பிரித் நிகழ்வு திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.


மேலும் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்த்தவ மத நிகழ்வுகளும் மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமாரவின் தலைமையில் நடைபெறவுள்ளன.


நாளை பகல் 12.30 மணிக்கு திருகோணமலை அனுராதபுர சந்தி மஸ்ஜிதுல் ஹுலூர் ஜும்மா பள்ளிவாசலில் இஸ்லாமிய சமய நிகழ்வுகளும் , மாலை 4.30 மணிக்கு இந்து மத பூஜை வழிபாடுகள் ஸ்ரீகோணேஸ்வர கோயிலிலும் நடைபெறவுள்ளது.

பிரதமருக்கு ஆசி வேண்டி திருகோணமலையில் நாளை சர்வமத பிரார்த்தனை .. பிரதமருக்கு ஆசி வேண்டி திருகோணமலையில் நாளை சர்வமத பிரார்த்தனை .. Reviewed by Madawala News on 8/03/2017 12:04:00 AM Rating: 5