Kidny

Kidny

இந்திய கிரிக்கட் ரசிகர்களை போல் நாம் நடந்துகொள்ளக் கூடாது ! 


இலங்கை கிரிக்கட் ரசிகர்கள் இந்திய கிரிக்கட் ரசிகர்கள் போல நடந்துகொள்ளக்கூடாது என முன்னாள் இலங்கை அணித்தலைவர் பெற்ரோலிய துறை அமைச்சர் அர்ஜுன ரனதுங்க கோரியுள்ளார்.


இன்று அவரது அமைச்சில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறுகையில் ,

நாம் கிரிக்கட்டுக்காக பல தியாகங்களை செய்துள்ளோம். எமது வீரர்கள் கடும் அழுத்தங்களை சந்தித்துள்ளனர்.எமது நாட்டு கிரிக்கட் ரசிகர்கள் அளவுக்கு அதிகமாக கிரிக்கட்டை நேசிக்கின்றனர்.எனது அணி தோல்வியடையும் போது அவர்களால் அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை.

ஆனால் நாம் மோசமாக நடந்துகொள்ள கூடாது எமக்கென ஒரு வரலாறு மற்றும் கலாசாரம் உள்ளது அதனை பாலாக்கும் வகையில் நாம் நடந்துகொள்ள கூடாது என குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கட் ரசிகர்களை போல் நாம் நடந்துகொள்ளக் கூடாது !  இந்திய கிரிக்கட் ரசிகர்களை போல் நாம் நடந்துகொள்ளக் கூடாது !  Reviewed by Madawala News on 8/28/2017 11:01:00 PM Rating: 5