tg travels

அரச வேலை வாய்ப்புகள் வழங்கப்படும்போது முஸ்லிம்களுக்கு அநீதி ..


ஏ.ஆர்.ஏ. பரீல்

இனவாதம் மற்றும் மதவாதம் பரப்பப்பட்டு நாட்டில் பயமுறுத்தல், அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வரும் நிலையை இல்லாமல் செய்ய வேண்டும்.மக்கள் சுதந்திரமாக வாழும் சூழ்நிலை உருவாக்கப்படும் வகையில் சட்டம் அமுல் நடத்தப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முஸ்லிம் சம் மேளனம் ஜனாதிபதியிடம் விடுத்துள்ள வேண்டுகோளில் குறிப்பிட்டுள்ளது. 


மேற்படி அமைப்பின் செயலாளர் சட்டத்தரணி எம்.எல்.எம். அலி பாரூக் மற்றும் சம்மேளனத் தலைவர் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸி ஆகியோரின் வேண்டுகோளுக்கமைய ஜனா திபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள கோரிக்கைகளாவன அரச துறை, வங்கி, கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரச சபைகளிலும் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும்போது முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. அதனால் முஸ்லிம்களுக்கு தகுதி, அல்லது விகிதாசார அடிப்ப டையில் வேலைவாய்ப்புகள் வழங்கப் பட வேண்டும். முஸ்லிம் பிரதேசங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளும்போது முஸ்லிம் பிரதிநிதியொருவர் நியமிக்கப் பட வேண்டும், அனைத்து மாகாண சபைகளின் அரச சேவை ஆணைக்குழுக்களில் முஸ்லிம் பிரதிநிதி ஒருவர் நியமிக்கப்படவேண்டும். 


கம் உதாவ திட்டத்தின் கீழ் நிர்மாணிக் கப்படும் வீடமைப்புத் திட்டங்களில் முஸ்லிம்களுக்கும் வாய்ப்பு வழங்கும் வகையில் நடைமுறையொன்று அமுல் நடத்தப்பட வேண்டும்.முஸ்லிம் பாடசாலைகளில் இஸ்லாம் பாடம் கற்பிப்பதற்கு ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படும்போது அறபு மொழிப் பாடத்தில் சித்தியடைந்த வர்களுக்கு முதலிடம் வழங்கப்பட வேண்டும். முன்னாள் ஆளுநர் அலவி மெளலனா முஸ்லிம்களின் நலன் கருதி, முன்னெடுத்த வேலைத் திட்டங்களைத் தொடருவதற்கு முஸ்லிம் ஆளுநர் ஒருவர் நியமிக் கப்பட வேண்டும்.

கட்சியை முதன்மைப்படுத்துவதற்காக கட்சியின் முன்னாள் பிரதேச மற்றும் மாகாண சபைகள் பிரதிநிதிகளை ஊக்கப்படுத்தும் வேலைத் திட்டங்களை ஆரம்பித்து உள்ளூராட்சித் தேர்தலில் கட்சியை வெற்றியடையச் செய்யும் வேலைத் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் மேற்படி வேண்டுகோளில் முன்வைக்கப்பட்டுள்ளன.

அரச வேலை வாய்ப்புகள் வழங்கப்படும்போது முஸ்லிம்களுக்கு அநீதி .. அரச வேலை வாய்ப்புகள் வழங்கப்படும்போது முஸ்லிம்களுக்கு அநீதி .. Reviewed by Madawala News on 8/29/2017 03:08:00 PM Rating: 5