tg travels

அசிங்கப்ப(டுத்தப்ப)டும் உலமாக்கள்


அண்மைக் காலமாக முகநூலில் பகிரப்படும் உலமாக்கள் சார்பான பதிவுகளைப் பார்க்கும் போது கவலையாகவும் சங்கடமாகவும் உள்ளது. இந்த பதிவை எழுதுவது அதைவிட தர்மசங்கடமாகவும் இருக்கிறது. காரணம் எம்மை திருத்த வேண்டியவர்களே திருத்தப்பட வேண்டிய நிலையில்,


முகநூலில் மார்க்கம் தொடர்பான விவாத, விதண்டாவாத காணொளிகள் பதிவிடும் போதும் பகிரப்படும் போதும் அக்குறித்த காணொளியில் உள்ள கண்ணியமிக்க உலமாக்கள் பற்றி மிக மோசமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டு, சில சந்தர்ப்பங்களில் தென்னிந்திய சினிமா பாணியில் இரு தரப்பாலும் ஏட்டிக்கு போட்டியாக கேவலப்படுத்தப்படுகிறார்கள். அக்குறித்த காணொளிகள் உண்மையை உரக்கச் சொல்லுதோ இல்லையோ ஒரு குறித்த உலமா அல்லது உலமாக்களை மோசமான முறையில் விமர்சிப்பதை பேசுபொருளாக கொண்டிருக்கிறது.


உலமாக்களே! நீங்கள் இயக்கங்களை முன்னிருத்தி ஹக்கை வெளிச் சொல்கிறோம் என்ற பெயரில் அடித்துக் கொள்வதும் அவமானப்படுத்துவதும் தங்களைப் போலவே மார்க்கம் கற்ற உலமாக்களை என்பதை ஒரு போதும் மறந்து விடாதீர்கள் . 


"ஒரு முஸ்லிமின் மானம் மற்றொரு முஸ்லிமுக்கு அமானிதம்" என்பதும் "இம்மையில் அடுத்தவனின் குறைகளை மறைப்பவனின் குறைகளை மறுமையில் முழு மனித சமுதாயத்தின் முன்னிலையில் அல்லாஹ் மறைக்கிறான்" என்பதும் நீங்கள் எங்களுக்கு உரைத்த நபி வழி பாடங்கள்தாம். இன்று அதே நபி மொழிகளை நாங்கள் உங்களுக்கு கற்பிக்க வேண்டிய நிலையில் என்பதுதான் வருத்தமான விடயம் . 


உலமாக்கள் என்றாலே கண்ணியமானவர்கள்தான்; அவர்கள் நபியின் வாரிசுகள். முஸ்லிம் உம்மத்தை நபி வழியில் நடாத்த தமது இளமை உற்பட பல தசாப்தங்களை தியாகம் செய்த பெருந்தகைகள் அவர்கள். உலமாக்கள் கேவலப்படுத்தமாட்டார்கள், கேவலப்படுத்தப்பட முடியாதவர்கள். உலமாக்களை கண்ணியப்படுத்தாதவர்களுக்கு மார்க்கத்தில் என்ன பங்கு இருந்திட போகிறது.

மூதூர் யூ.எம். லுத்பி (f)

அசிங்கப்ப(டுத்தப்ப)டும் உலமாக்கள் அசிங்கப்ப(டுத்தப்ப)டும் உலமாக்கள் Reviewed by Madawala News on 8/28/2017 10:38:00 PM Rating: 5