Ad Space avaiable

கடந்த வாரம் மங்களவின் செயலாளர் கைது இவ்வாரம் DIG நீக்கம் !


பொலிஸ் விஷேட அதிரடிப்படைக்கு பொறுப்பாக கடமையாற்றும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எம்.ஆர்.லதீப் அவர்களை அந்த பதவியில் இருந்து நீக்க சுயதீன பொலிஸ் ஆணைக்குழு தீர்மாணித்துள்ளதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


குறித்த செய்திக்குறிப்பில் இது தொடர்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

குறித்த நியமணம் வழங்கப்பட்டமை தொடர்பில் சட்ட சிக்கல் இருப்பதாக பொலிஸ் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வாரம் பொலிஸ் விஷேட அதிரடிப்படை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் போதைப்பொருள் வகைகளை வாகனத்தில் கொண்டு சென்ற அமைச்சர் மங்கள சமரவீரவின் இணைப்பு செயலாளர் கைது செய்யப்பட்ட நிலையில் அதிரடிப்படை குறித்த நபரை அதிரடியாக பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இந்த நடவடிக்கை தொடர்பில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எம்.ஆர்.லதீப் அவர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

இந்த சம்பவங்களின் பின்னணியில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எம்.ஆர்.லதீப் அவர்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கடந்த வாரம் மங்களவின் செயலாளர் கைது இவ்வாரம் DIG நீக்கம் ! கடந்த வாரம் மங்களவின் செயலாளர் கைது இவ்வாரம் DIG நீக்கம் ! Reviewed by Madawala News on 8/10/2017 10:58:00 PM Rating: 5