Kidny

Kidny

எடுத்துக்காட்டான அரசியில் காலாசாரத்தை கடைப்பிடிப்பவரே  பிரதமர் ரனில்..

 

எந்த சந்தர்ப்பத்திலும் அதிகாரம் மற்றும் பதவிகளை நோக்கி செயற்படாது எடுத்துக்காட்டான அரசியில் காலாசாரத்தை கடைப்பிடிப்பவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க என்று சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனரத்ன தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் 40 வருட கால அரசியல் வாழ்க்கையின் நிறைவை முன்னிட்டு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் பிரதமரின் அரசியல் வாழ்;க்கையின் முக்கிய சந்தர்ப்பங்களை உள்ளடக்கிய கண்காட்சியில் இன்று கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இந்த விடயத்தை அமைச்சர் தெரிவித்தார். 

இந்த கண்காட்சியின் மூன்றாம் நாள் இன்றாகும். எதிர்காலத்தை எவ்வாறு நோக்க வேண்டும் என்பது தொடர்பில் தூர நோக்குடன் செயற்படும் தலைவர் என்ற ரீதியில் பிரதமரின் சிந்தனைகள் மிகவும் முக்கியமானதாகும். பிரதமர் அரசியல் ரீதியில் தோல்விகளைச் சந்தித்தபோது ஏற்பட்ட நெருக்கடியான நிலையில் பொறுமையுடனும், தூர நோக்குடனும் தமது பயணத்தை முன்னெடுத்ததாகவும் சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனரத்ன மேலும் கூறினார்.

இந்நிகழ்வில் அமைச்சர் காமினி ஜயவிக்ரமவும் உரையாற்றினார். 

நாலாந்த மஹாவிகாரதிபதி சங்கைக்குரிய தித்தினியாவ பாலித தேரர் , அமைச்சர் எஸ்.பி.நாவின்ன, பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா, ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ உள்ளிடடோரும் இதில் கலந்து கொண்டனர். 

எடுத்துக்காட்டான அரசியில் காலாசாரத்தை கடைப்பிடிப்பவரே  பிரதமர் ரனில்.. எடுத்துக்காட்டான அரசியில் காலாசாரத்தை கடைப்பிடிப்பவரே  பிரதமர் ரனில்.. Reviewed by Madawala News on 8/19/2017 10:00:00 PM Rating: 5