Kidny

Kidny

விஜேதாச ராஜபக்‌ஷவை நீக்க தீர்மானம் ! 


நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷவை அமைச்சர் பதவி மற்றும் கட்சி உறுப்புரிமைகளில் இருந்து நீக்க ஐக்கிய தேசிய கட்சி உயர்மட்டத்துக்கு பரிந்துரைசெய்ய கட்சியினால் இது தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழு தீர்மாணித்துள்ளதாக சிரிகொத்த செய்திகள் மடவளை நியுஸுக்கு தெரிவித்தன.


இன்று இடம்பெற்ற குறித்த உயர்மட்ட குழுவின் விஷேட கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி உயர்மட்டத்துக்கு இந்த தீர்மானத்தை அறிவிக்க தீர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் நியமிக்கப்பட்ட இந்த விஷேட குழு இன்று மாலை அலறி மாளிகையில் இடம்பெறவுள்ள பிரதமருடனான கூட்டத்தில் இந்த தீர்மானத்தை அறிவிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.


இது தொடர்பில் இறுதி தீர்மானம் பிரதமரினால் மேற்கொள்ளப்படும் என கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.



விஜேதாச ராஜபக்‌ஷவை நீக்க தீர்மானம் !  விஜேதாச ராஜபக்‌ஷவை நீக்க தீர்மானம் !  Reviewed by Madawala News on 8/21/2017 03:18:00 PM Rating: 5