Ad Space avaiable

ஆபத்தான சூழ்நிலையில் முஸ்லீம் சமுகம் அவசர கலந்துரையாடலுக்கு அழைக்கிறது கிழக்கு மக்கள் அவையம்..


20வது அரசியல்அமைப்பு சீர்திருத்தம் பற்றிய அரசின் முன்மொழிவுகள் மற்றும் மாகாண சபை திருத்த சட்டமூலம் தொடர்பாக முஸ்லீம் சமுகம் அவசரமாக கலந்துரையாடவுள்ளது.

குறிப்பாக கிழக்கு முஸ்லீம் சமுகம் அக்கறை கொள்ள வேண்டியுள்ளது

இவ்வாறு நேற்று 08.08.2017 ரி.எப்.சி.மண்டபத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அதன் இணைச் செயலாளர்கள் சட்டத்தரணி எம்.எம். பஹீஜ் சட்டத்தரணி மர்சூம் மெளலானா ஆகியோர் கருத்து வெளியிட்டனர்.

மேலும் கருத்து வெளியிடுகையில்,

இச் சட்டமூல திருத்தங்கள் முஸ்லீம் சமுகத்தின் மீதும் சிறுபான்மை மக்களின் மீதும் ஏற்படுத்தவுள்ள தாக்கங்கள் தொடர்பில் கவனமாக ஆராயப்பட வேண்டியுள்ளது.

இத் திருத்தங்களில் முன்வைக்க படவுள்ள இனத்தீர்வு யோசனைகள் எமது சமுகம் எதிர் கொண்டுள்ள காணிப் பிரச்சினைகள் என்பன குறித்து அரசியல் தலைமைகள், புத்திஜவிகள், சமுக செயற்பாட்டாளர்கள், துறை சார் நிபுணர்கள் ஒண்றினைந்து கூடி பேசி ஆராய்ந்து முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக கிழக்கு மக்கள் அவையம் கலந்துரையாடலை ஏற்பாடு செய்து இருக்கிறது. 

இந்த கலந்துரையாடலில் கலந்து கொள்ள வேண்டுமென சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ,அ.இ.மக்கள் காங்கிரஸ் ,நல்லாட்சிக்கான தேசிய முண்ணனி, உலமா கட்சி, தூய முஸ்லீம் காங்கிரஸ் ,தேசிய ஐக்கிய முண்ணனி, சுதந்திர கட்சியின் முஸ்லீம் பிரிவு, ஐக்கிய தேசிய கட்சியின் முஸ்லீம் பிரிவு உள்ளிட்ட அணைத்து கட்சிகளுக்கும், சமுக நிருவனங்கள், அமைப்புக்கள், அதன் தலைமைகளையும் கலந்து கொள்ளுமாறு பகிரங்கமாக அழைப்பு விடுக்கிறோம்.

எமது அமைப்பினால் நடாத்தப்பட்ட அம்பாரை மாவட்ட காணிப்பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடலில் கலந்து கொண்ட கட்சிகளுக்கும் மக்கள் பிரதநிதிகளுக்கும் நன்றிகளை தெரிவித்து தொடர்ந்தும் உங்களது ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்.

ஆபத்தான சூழ்நிலையில் முஸ்லீம் சமுகம் அவசர கலந்துரையாடலுக்கு அழைக்கிறது கிழக்கு மக்கள் அவையம்.. ஆபத்தான சூழ்நிலையில் முஸ்லீம் சமுகம் அவசர கலந்துரையாடலுக்கு அழைக்கிறது கிழக்கு மக்கள் அவையம்.. Reviewed by Madawala News on 8/09/2017 02:45:00 PM Rating: 5