Kidny

Kidny

ஒரு லட்சம் கோடி இழப்பு !ராஜாங்க அமைச்சர் யாபா மீண்டும் அடித்துக்கூறுகிறார்..


மத்திய வங்கி முறி மோசடியினால் நாட்டுக்கு ஒரு லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக முன்னாள் நிதி ராஜாங்க அமைச்சர் லக்‌ஷ்மன் யாபா அபேகுனர்வதன குறிப்பிட்டிருந்த நிலையில் இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி விமர்சனங்களை வெளியிட்டிருந்தது.

இவரது இந்த குற்றச்சாட்டு தொடர்பில் எந்த அடிப்படை உண்மையும் இல்லை என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் கூறியிருந்த நிலையில் மத்திய வங்கி முறி மோசடியினால் நாட்டுக்கு ஒரு லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக முன்னாள் நிதி ராஜாங்க அமைச்சர் லக்‌ஷ்மன் யாபா அபேகுனர்வதன மீண்டும் கூறியுள்ளார்.

தான் அரசியலுக்கு வரமுன்னர் வங்கித்துறையில் கடமை புரிந்துள்ளதாகவும் தனக்கு கணக்கு தெரியும் எனவும் ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியினதும் சுதந்திர கட்சியினதும் அர்பணிப்பு காரணமாக இந்த விடயங்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


ஒரு லட்சம் கோடி இழப்பு !ராஜாங்க அமைச்சர் யாபா மீண்டும் அடித்துக்கூறுகிறார்.. ஒரு லட்சம் கோடி இழப்பு !ராஜாங்க அமைச்சர் யாபா மீண்டும் அடித்துக்கூறுகிறார்.. Reviewed by Madawala News on 8/17/2017 10:09:00 PM Rating: 5