Kidny

Kidny

தமிழர்களின் காணிகளை  முஸ்லிம் அரசியல் வாதிகள் அபகரிக்கின்றனர் : பா.அரியநேத்திரன்


நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தின் போது  கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் பூர்வீக காணிகள் அதிகளவு பறிபோவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.


பௌத்த மதகுருமார்களினாலும், முஸ்லிம் அரசியல் வாதிகளினாலும் தமிழ் மக்களின் காணிகள் சுவிகரிக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் காணி அபகரிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சுமத்தினார். 

அதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் இணைந்த அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.


தமிழர்களின் காணிகளை  முஸ்லிம் அரசியல் வாதிகள் அபகரிக்கின்றனர் : பா.அரியநேத்திரன் தமிழர்களின் காணிகளை  முஸ்லிம் அரசியல் வாதிகள் அபகரிக்கின்றனர் : பா.அரியநேத்திரன் Reviewed by Madawala News on 8/07/2017 07:38:00 PM Rating: 5