Ad Space Available here

மறிச்­சுக்­கட்டி முஸ்லிம் பூர்வீக நிலங்கள் கைநழுவிப்போகும் அபாயம் !


கட்டி பிர­தேசம் கைந­ழு­விப்­போகும் அபாயம் எழுந்­துள்­ளது, பாதிக்­கப்­பட்ட அப்­பி­ர­தே­சத்து மக்கள் விழிப்­பு­ணர்­வுடன் செயற்­ப­ட­வேண்டும் என நகர திட்­ட­மிடல் மற்றும் நீர்­வ­ழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.


எனவே மறிச்­சுக்­கட்டி,பாலைக்­குழி, கொண்­டச்சி,கர­டிக்­குழி ஆகிய பிர­தே­சங்­களில் தமது பூர்­வீக நிலத்தை இழந்து வாழ்­கின்­ற­வர்கள் தமது முறைப்­பா­டு­களை விரைவில் இது தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள ஜனா­தி­பதி ­கு­ழு­விற்கு சமர்ப்­பி­க்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். 


மன்னார் முசலி பிர­தே­சத்­தி­லுள்ள ஹுனைஸ் நகரில் அமைந்­துள்ள ஹுனைஸ் பாரூக் அர­சினர் முஸ்லிம் கலவன் பாட­சா­லையில் அமைக்­கப்­பட்ட கேட்போர்


கூடத்­துடன் வகுப்­பறை கட்­டிடத் தொகு­திகள் நேற்­று­முன்­தினம் நகர திட்­ட­மிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்­சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரசின் தலை­வ­ரு­மான ரவூப் ஹக்­கீ­மினால் திறந்து வைக்­கப்­பட்­டது .இதன் போது உரை­நி­கழ்த்­து­கை­யி­லேயே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரை நிகழ்த்­து­கையில்,


கடந்த யுத்­த­கா­லத்தில் இடம்­பெ­யர்ந்த இந்­தப்­பி­ர­தே­சத்து மக்­களின் காணி­களை அரச வர்த்­த­மானி அறி­வித்­த­லின்­படி வில்­பத்து வனத்­திற்கு சொந்­த­மான பிர­தே­ச­மாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன. இந்­த­வி­ட­யத்தில் அப்­பி­ர­தே­ பூர்­வீக குடி­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­பட்­டி­ருப்­பது தொடர்பில் ஜனா­தி­பதி மற்றும் பிர­த­மரின் கவ­னத்­திற்கு கொண்­டு­வந்­த­தற்­கி­ணங்க ஜனா­தி­ப­தியின் ஆலோ­ச­னைக்­கி­ணங்க அவ­ரது செய­லா­ள­ரினால் அனுப்பி வைக்­கப்­பட்ட உய­ர­தி­கா­ரி­க­ளு­ட­னான சந்­திப்பும் முசலி பிர­தேச சபை கேட்போர் கூடத்தில் இடம்­பெற்­றது. 


அதன்­ பிற்­பாடு ஜனா­தி­ப­தியின் சுயா­தீன குழு இந்­தப்­பி­ர­தே­சத்­திற்கு விஜ­யம்­மேற்­கொண்டு இப்­பி­ர­தே­ச மக்­களின் உண்­மை­யான நிைல­வ­ரத்தை கேட்­ட­றியும் நட­வ­டிக்­கை­களும், எல்­லை­களை மீண்டும் இனங்­கண்டு உறு­திப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கைளை அண்­மையில் மேற்­கொண்­ட­தாக அறி­யக்­கி­டைத்­தது. இதன்­போது இந்­தப்­பி­ர­தே­ச மக்கள் இந்­த­வி­டயம் தொடர்பில் அதி­கா­ரி­க­ளுக்கு சரி­யான தக­வல்­களை வழங்­கத்­த­வ­றி­விட்­ட­தா­கவும் தக­வல்கள் கிடைத்­துள்­ளன. 


எனவே, மறிச்­சுக்­கட்டி,பாலைக்­குழி, கொண்­டச்சி,கர­டிக்­குழி ஆகிய பிர­தே­சங்­களில் தமது பூர்­வீக நிலத்தை இழந்து வாழ்­கின்­ற­வர்கள் தமது முறைப்­பா­டு­களை விரைவில் ஜனா­தி­பதி கு­ழு­விற்கு சமர்ப்­பி­யுங்கள். இந்த விட­யத்தில் இந்தப் பிர­தே­ச ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் செயற்­பாட்­டா­ளர்கள் கரி­ச­னை­யுடன் செயற்­ப­டு­மாறும், பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி­யினை பெற்­றுக்­கொ­டுப்­பதில் முன்­னிற்­கு­மாறும் கேட்­டுக்­கொள்­கிறேன். 


இன்­னு­மொரு விடயம் இந்­தப்­பி­ர­தே­சத்தில் அநீ­தி­யாக இடம்­பெற்­றுள்­ளது. அதா­வது, எல்­லை­மீள்­நிர்­ணயம் தொடர்பில் முசலி பிர­தேசம் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. எமது விகிதாசா­ரத்­திற்கு ஏற்ப பிர­தேச சபை உறுப்­பி­னர்­களை பெற்­றுக்­கொள்­வ­தற்கு புதிய எல்­லைப்­பி­ரிப்­பா­னது தடை­யாக அமைந்­துள்­ளது. இது தொடர்பில் எமது ஆட்­சே­ப­னை­களை நாம் மிகத்­தெ­ளி­வாக முன்­வைத்தும் மீண்டும் அதே தவறு எல்­லைப்­பி­ரிப்பில் இடம்­பெற்­றுள்­ளது என்­பது அங்­கீ­க­ரிக்க முடி­யாத ஒரு விட­ய­மாகும்.   


இது ­தொ­டர்பில் பல­ வா­த­வி­வா­தங்­களில் நாம் பங்­கு­பற்­றி­யுள்ளோம். மிகக்­கு­றைந்த அதி­கா­ரத்­தை­யு­டைய சபை­யாக இருந்­தாலும் அதிலும் நாம் பாதிப்­ப­டை­கின்­ற­வர்­க­ளாக, நம்மை ஆக்­கு­கின்ற நிைல­வரம் கேள்­விக்­குட்ப­டுத்­த­வேண்­டி­ய­வையே. எனவே இந்த பிழை­யான எல்லை பிரிப்பு தொடர்பில் மீண்டும் கவனம் செலுத்தி எமக்­கு­ரிய சரி­யான அள­வீ­டு­களை பெற்­றுக்­கொள்­வதில் நாங்கள் அவ­தானம் செலுத்­த­வேண்­டிய தரு­ணத்தில் இருக்­கிறோம் என்றார்.

மறிச்­சுக்­கட்டி முஸ்லிம் பூர்வீக நிலங்கள் கைநழுவிப்போகும் அபாயம் ! மறிச்­சுக்­கட்டி முஸ்லிம் பூர்வீக நிலங்கள் கைநழுவிப்போகும் அபாயம் ! Reviewed by Madawala News on 8/17/2017 12:20:00 AM Rating: 5