Kidny

Kidny

பொலிஸ் உருவப்பொம்மை எரித்து எதிர்ப்பு வெளியிட்ட சுமணரத்ன தேரர் ..


மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனக்கெதிராக எவ்வித விசாரணையுமின்றி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்குதல் செய்தமையைக் கண்டித்து இன்று புதன்கிழமை மங்களராம விகாரையின் விகாரதிபதியான அம்பிட்டிய சுமணரத்ன தேரர் பொலிஸாருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக பொலிசாரின் உருவப் பொம்மையை அவரது விகாரை பகுதியில் வைத்து தீயிட்டு எரித்து எதிர்ப்பை தெரிவித்தார்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் கெவிலியாமடு விகாரையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுவந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மது போதையில் கடமையில் ஈடுபட்டபோது அவருக்கும் தேரருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தினையடுத்து மங்களகம பொலிஸ் நிலைத்திற்கு சென்று தோர் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த நிலையில் தேரர் தன்னை அடித்ததாக தேரருக்கு எதிராக குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். 

இதேவேளை வேறு ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தோர் தன்னை அடித்ததாகவும் வைத்தியசாலையில் தான் அனுமதிக்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பொலிஸ் உருவப்பொம்மை எரித்து எதிர்ப்பு வெளியிட்ட சுமணரத்ன தேரர் .. பொலிஸ் உருவப்பொம்மை எரித்து எதிர்ப்பு வெளியிட்ட சுமணரத்ன தேரர் .. Reviewed by Madawala News on 8/23/2017 11:01:00 PM Rating: 5