Kidny

Kidny

விஜேதாச ராஜபக்‌ஷவுக்கு ஆதரவு வழுக்கிறது !சட்டத்தரணிகள் சங்கமும் ஆதரவு ..


நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷவுக்கு எதிராக முன்வைக்கப்படும் விமர்சனங்கள் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.


இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள இலங்கை சட்டதரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி யூ ஆர் டி சில்வா சட்டத்தரணிகள் சங்கம் சார்பாக தங்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் நீதி அமைச்சர் மீது விரல் நீட்டுவது அடிப்படையற்றது என கூறியுள்ள அவர் அவை அரசியல் காரணங்களுக்காக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு என கூறியுள்ளார்.

நீதிமன்ற நடவடிக்கைகள் மிகவும் மொதுவாக நடப்பது ஏன் என்ற காரணம் தொடர்பிலும் அதனை நிவர்த்தி செய்ய என்ன வழிமுறை என ஏற்கனவே நீதி அமைச்சர் கூறியுள்ள நிலையில் அரசியல் நோக்கங்களுக்காக அவர் மீது சேறு பூசுவதை தாங்கள் கண்டிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை சட்டமா அதிபர் திணைக்களம் தொடர்பில் அரசியல் வாதிகள் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வெளியிடுவதால் அத்திணைகள நடவடிகள் தொடர்பில் மக்களுக்கு சந்தேகம் எழும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விஜேதாச ராஜபக்‌ஷவுக்கு ஆதரவு வழுக்கிறது !சட்டத்தரணிகள் சங்கமும் ஆதரவு .. விஜேதாச ராஜபக்‌ஷவுக்கு ஆதரவு வழுக்கிறது !சட்டத்தரணிகள் சங்கமும் ஆதரவு .. Reviewed by Madawala News on 8/15/2017 01:14:00 AM Rating: 5