Ad Space avaiable

கூட்டு அரசாங்கத்திற்கு விரைவில் ' அபசரணை' ? 


நல்லாட்சி கூட்டு அரசாங்கம் விரைவில் நிறைவுக்கு வரும் நிலை தோன்றியுள்ளதாக கொழும்பு அரசியல் கள நிலவரங்கள் மூலம் அறிய முடிகிறது.


தற்போது கூட்டு அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள நேருக்கடி நிலை தொடர்பில் மடவளை நியுசுக்கு கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவரிடம் வினவிய போது.

ஐக்கிய தேசிய கட்சியுனை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் வகையில் தற்போது சுதந்திர கட்சி உறுப்பினர்கள் நடந்துகொள்வதாகவும் இந்த நிலை தொடர்ந்து தாங்கள் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் என பிரதம மந்திரியிடம் தாங்கள் அறிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.

அதே நேரம் இது விடயமாக எதிர்வரும் மாதங்களில் தீர்க்கமான முடிவு ஒன்றை எடுப்பதாக பிரதம மந்திரி ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக நம்பகமான தரப்புகள் எம்மிடம் தெரிவித்தன.

விரைவில் காலவதியாகவுள்ள மூன்று மாகாண சபைகளையும் கால நீடிப்பு செய்யும் பிரதமரின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி அது வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த வியாழன் இடம்பெற்ற சுதந்திர கட்சி மத்திய குழு கூட்டத்தில் தேர்தல் இழுத்தடிப்பு யோசனைக்கு கடும் எதிர்ப்பு வெளியிட தீர்மானிக்கப்பட்டது.

அத்தோடு குறித்த யோசனையை பாராளுமன்றில் தோற்கடிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் மந்த கதியில் இடம்பெறுவதாகவும் ஐக்கிய தேசிய கட்சி தொடர்பு பட்டுள்ள மத்திய வங்கி முறி விசாரணை படுவேகமாக இடம்பெறுவதாகவும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதி தரப்பை குற்றம் சுமத்திவருகின்றனர்.

கூட்டு அரசாங்கத்திற்கு விரைவில் ' அபசரணை' ?  கூட்டு அரசாங்கத்திற்கு விரைவில் ' அபசரணை' ?  Reviewed by Madawala News on 8/13/2017 03:18:00 PM Rating: 5