tg travels

கல்வி முன்னேற்றத்துக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி ..


பஹன்வெட தேசிய அமைப்பு நாடளாவிய ரீதியாக நடத்திவரும் கல்வி முன்னேற்றத்துக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி முதல் கட்டமாக மினுவாங்கொடை ஆசிரியர்களுக்கான உளவியல் மனப்பாங்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி திட்டம் ஒன்று அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பஹன்வெட தேசிய அமைப்பின் முஸ்லிம் பிரிவுக்கான ஒருங்கிணைப்பு செயலாளர் எம்.எல்.எம் ரிஸ்லான் தலமையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. 


ஆசிரியர்கள் மாணவர்களை எவ்வாறு வழிநடத்தல் வேண்டும் . கற்பித்தல் விடயத்தில் ஆசிரியர்களின் பங்களிப்பு என்பன இன் நிகழ்ச்சியில் கூறப்பட்டன. இவ் வழிகாட்டுதல் நிகழ்ச்சி ஆலோசகர் கலாநிதி இல்ஹாம் மரிக்கார் அவர்களின் முலம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


கல்வி முன்னேற்றத்துக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி .. கல்வி முன்னேற்றத்துக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி .. Reviewed by Madawala News on 8/11/2017 02:37:00 PM Rating: 5