Ad Space avaiable

மியன்மார் அகதிகள் தனி வீட்டுக்கு மாற்றம்


மிரி­ஹான பொலிஸ் நிலைய விஷேட தடுப்பு முகாமில் தங்க வைக்­கப்­பட்­டுள்ள மியன்மார் முஸ்லிம் அக­திகள் தடுப்பு முகா­மி­லி­ருந்தும் அகற்­றப்­பட்டு ரத்மலானை பிரதேசத்தில்  தனி­யான வீடொன்­றுக்கு இடம் மாற்­றப்பட்டதாக சிரேஷ்ட சட்டத்தரணி ஸிராஸ் நூர்தீன் குறிப்பிட்டார்.


மிரி­ஹான பொலிஸ் நிலைய விஷேட தடுப்பு முகாமில் மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம் அக­தி­க­ளுக்கு இடம் பற்­றாக்­குறை நில­வு­வ­தாக பொலிஸார் தெரி­வித்து வந்த நிலையில் அவர்கள் அங்­கி­ருந்தும் இடம் மாற்­றப்­பட்டுள்ளனர்.


தடுப்பு முகா­மி­லி­ருந்தும் அக­தி­களை இடம் மாற்­று­வ­தற்கு வெளி­வி­வ­கார அமைச்சு, குடி­வ­ரவு –குடி­ய­கல்வு திணைக்­களம், மிரி­ஹான பொலிஸார், யு.என்.எச்.சி.ஆர் நிறு­வனம் என்­பன அனு­மதி வழங்­கி­யிருந்தது.


மியன்மார் அக­தி­களை வேறோர் இடத்­துக்கு இடம்­மாற்­று­வ­தற்கு நீதி­மன்றின் உத்­த­ர­வினைப் பெற்­றுக்­கொள்­ள­பட வேண்­டி­யுள்­ளது. எதிர்­வரும் 17 ஆம் திகதி அக­திகள் காங்­கே­சன்­துறை நீதிவான் நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­ப­ட­வுள்­ளனர். இந்­நி­லையில் 17 ஆம் திக­திக்கு முன்பு மியன்மார் அக­தி­களை இடம் மாற்­று­வ­தற்­கான உத்­த­ர­வு பெற்­றுக்­கொள்ளப்பட்டது­. 


இந்­தி­யா­வி­லி­ருந்து படகு மூலம் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு ரோஹிங்யா முஸ்லிம் அக­திகள் பய­ணித்த போது படகு கோளா­றுக்­குள்­ளாகி இலங்­கையின் வடக்கு கடல் எல்­லையில் கைது செய்­யப்­பட்­டனர். பின்பு அவர்கள் காங்­கே­சன்­துறை நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்படுத்­தப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். இவர்­களின் 7 ஆண்கள் 7 பெண்கள் மற்றும் 16 பிள்­ளைகள் அடங்­கு­கின்­றனர். 


இவ் அக­தி­களில் இளம் பெண் ஒருவர் மிரி­ஹான பொலிஸ் நிலைய கான்ஸ்­டபிள் ஒரு­வ­ரினால் பல­வந்­த­மாக பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உட்­ப­டுத்­தப்­பட்­டமை குறிப்பிடத்தக்கது. சந்தேக நபர் பொலிஸ் கான்ஸ்டபிள் அடையாள அணிவகுப்பின் போது பாதிக்கப்பட்ட பெண்ணினால் அடையாளம் காணப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


இந்த நிலையில் மியன்மார் முஸ்லிம் அக­திகள் தடுப்பு முகா­மி­லி­ருந்தும் அகற்­றப்­பட்டு ரத்மலானை தனி­யான வீடொன்­றுக்கு இடம் மாற்­றப்பட்டுள்ளனர்.


மியன்மார் அகதிகள் தனி வீட்டுக்கு மாற்றம் மியன்மார் அகதிகள் தனி வீட்டுக்கு மாற்றம் Reviewed by Madawala News on 8/11/2017 06:59:00 PM Rating: 5