Ad Space avaiable

இலங்கை அரசியல் களத்தில் சூடு பிடிக்கிறது விஜேதாச எபிசோட் ..


ரவி கருணாநாயக்க தொடர்பான சர்ச்சை சற்று ஓய்ந்துள்ள நிலையில் விஜேதாச ராஜபக்‌ஷ விடயம் தற்போது இலங்கை அரசியல் அரங்கில் சூடு பிடித்துள்ள அதே வேளை நல்லாட்சி அரசுக்கு புதிய தலையிடியை கொண்டு வந்துள்ளது.


நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச பதவி நீக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வருவதாக அறியமுடிகிறது.

தேசியக் கட்சிக்கும் அரசுக்கும் எதிராக கருத்து வெளியிட்டு வரும் விஜேதாச ராஜபக்ச தொடர்ப்பில் கட்சி நடவடிக்கையொன்றை எடுத்தே ஆக வேண்டும் என சுஜீவ சேனசிங்க வலியுறுத்தியுள்ள அதேவேளை நேற்றைய தினம் பிரதியமைச்சர் ஹர்ஷவும் தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதே நேரம் ஆளுங்கட்சியிலிருந்து கொண்டு கூட்டு எதிர்க்கட்சியின் செயற்பாடுகளை எதிரொலிக்கும் வகையில் நடந்து கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சி பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

விஜேதாச ராஜபக்ச தொடர்ச்சியாக அரச விரோத கருத்துக்களைத் தெரிவித்து வருவதாகவும் அண்மையில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை மக்களுக்காக மீட்கும் வரை போராடப்போவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது .

நேற்று இடம்பெற்ற நீதி அமைச்சின் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட நீதி அமைச்சர் விஜேதாசவிடம் அவருக்கு எதிராக கிளம்பியுள்ள சர்ச்சைகள் தொடர்பில் வினவப்பட்ட போது அவற்றுக்கு பதில் அளிக்காமல் அங்கிருந்து வெளியேறி இருந்தார்.

விஜேதாச ராஜபக்ச விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்று வந்தால் தான் வாக்களிக்கப் போவதில்லையென மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசியல் களத்தில் சூடு பிடிக்கிறது விஜேதாச எபிசோட் .. இலங்கை அரசியல் களத்தில் சூடு பிடிக்கிறது விஜேதாச எபிசோட் .. Reviewed by Madawala News on 8/12/2017 03:48:00 PM Rating: 5