Kidny

Kidny

ஆட்சியமைக்க நாம் ஜனாதிபதியிடம் செல்லவேண்டும்,தேர்தலில் வெற்றி பெற ஜனாதிபதி எம்மிடம் வரவேண்டும்..


தேர்தலை சந்தித்து அதில் வெற்றி பெற வேண்டும் என்றால் ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன தங்களை தேடி வரவேண்டி வரும் என முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டார்.


நேற்று கல்கிஸ்சை பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட அவரிடம் பாராளுமன்றத்தில் 113 ஆதரவை பெற்றாலும் ஆட்சி அமைக்க தனது ஆசீர்வாதம் தேவை என ஜனாதிபதி கூறியுள்ளமை தொடர்பில் அவரிடம் கேள்வி எழுப்பிய போது அவர் மேற்கண்டவாறு பதில் அளித்திருந்தார்.

ரவி கருணாநாயக்கவின் சர்ச்சை தொடர்பில் ஊடகவியலாளர் அவரிடம் கேள்வி எழுப்பிய போது ..

எனக்கு தெரியாது எனக்கு மறந்துவிட்டது என நக்கலாக பதில் கூறிய அவர் அது தொடர்பில் மக்கள் தெளிவாக உள்ளனர் எனவும் தாங்களிடன் இருந்தாக கூறிய லம்போகினி கார், தங்க குதிரை ஹெலிகொப்டர் ஆகியவை எங்கே என கேள்வி எழுப்பினார்.

ஆட்சியமைக்க நாம் ஜனாதிபதியிடம் செல்லவேண்டும்,தேர்தலில் வெற்றி பெற ஜனாதிபதி எம்மிடம் வரவேண்டும்.. ஆட்சியமைக்க நாம் ஜனாதிபதியிடம் செல்லவேண்டும்,தேர்தலில் வெற்றி பெற ஜனாதிபதி எம்மிடம் வரவேண்டும்.. Reviewed by Madawala News on 8/04/2017 08:00:00 PM Rating: 5