tg travels

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தயாராகும் ஐக்கிய தேசிய கட்சி..


உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் எதிர்­வரும் டிசம்பர் மாதம் நடத்­தப்­படும். இதன்­படி ஒக்­டோபர் மாத இறு­திக்குள் கிராம மட்­டத்தில் கட்சி கிளை சங்­கங்கள் நிறுவும் செயற்­பா­டுகள்  பூர்த்தி செய்­யப்­பட வேண்டும். 


உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றால் மாத்­தி­ரமே தேசிய அர­சாங்­கத்தின் அடுத்த இரண்டு வருட பய­ணத்தை வெற்­றி­க­ர­மாக கொண்டு செல்ல முடியும். தேசிய அர­சாங்­கத்தின் பயணம் எமது கைக­ளி­லேயே உள்­ளது என ஐக்­கிய தேசியக் கட்­சியின் தொகுதி அமைப்­பா­ளர்கள் கூட்­டத்தில் அக்­கட்­சியின் பொதுச்­செ­ய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான கபீர் ஹாசிம் தெரி­வித்தார்.

தொகுதி மட்­டத்தில் உள்ள பிரச்­சி­னை­க­ளை­யும் குறைபா­டு­களையும் தீர்ப்­ப­தற்கு ஒரு மாத அவ­காசம் தரு­கின்றோம். அவ­கா­சத்தின் பின்னர் உரிய முறையில் செயற்­ப­டாத தொகு­தி­க­ளுக்கு சிறி­கொத்தா உயர்­பீடம் தலை­யிட்டு தொகுதி நட­வ­டிக்­கை­களை பொறுப்­பேற்கும் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் நாட­ளா­விய ரீதி­யி­லுள்ள 160 தேர்தல் தொகுதி அமைப்­பா­ளர்­களும் கட்­சியின் செயற்­பாட்­டா­ளர்­களும் நேற்று கொழும்­புக்கு அழைக்­கப்­பட்­டி­ருந்­தனர். இந்த கூட்டம்  நேற்று பிட்ட கோட்­டேயில் அமைந்­துள்ள ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நடை­பெற்­றது.

இதன்­போது ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிரதி தலை­வரும் அமைச்­ச­ரு­மான சஜித் பிரே­ம­தாஸ, கட்­சியின் பொதுச் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான கபீர் ஹாசிம், அமைச்­சர்­க­ளான அகிலவிராஜ் காரி­ய­வசம், கயந்த கரு­ணா­தி­லக ஆகியோர் முன்­னிலை வகித்து கூட்­டத்தை நடத்­தினர்.  இந்த கூட்­டத்தில் வெளி­வி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க சமுக­ம­ளிக்­க­வில்லை. 

இதன்­போது உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் கிராம மட்டச் செயற்­பா­டுகள் குறித்தும் பர­வ­லாகப் பேசப்­பட்­டது.  உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லுக்கு வேட்­பா­ளர்­களைத் தெரிவு  செய்யும் போது கடைப்­பி­டிக்க வேண்­டிய முறைகள் தொடர்பில் பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா விரி­வான விளக்­கத்தை தொகுதி அமைப்­பா­ளர்­க­ளுக்கு வழங்­கினார்.

கிரா­மத்தில் பிர­ப­ல­மா­ன­வர்­க­ளையும் கிரா­மத்தின் மீது பற்­றுக்­கொண்­ட­வர்­க­ளையும்   தெரிவு செய்ய வேண்டும் என்ற விளக்­கத்தை வழங்­கினார். அத்­து­டன வேட்­பா­ளர்கள் தெரிவின் போது புள்­ளி­யிடல் செயற்­பா­டுகள் குறித்தும் விளக்கம் அளிக்­கப்­பட்­டது. 

இதன்­போது தொகுதி அமைப்­பா­ளர்­களின் கூட்­டத்தில் அடுத்த கட்ட செயற்­பா­டுகள் குறித்து கட்­சியின் பொதுச்­ செ­ய­லா­ளரு அமைச்­ச­ரு­மான கபீர் ஹாசிம் நீண்ட விளக்­கத்­தையும் எச்­ச­ரிக்­கை­யையும் விடுத்தார்.

அமைச்சர் கபீர் ஹாசிம் தொகுதி அமைப்­பாளர் முன்பு உரை­யாற்­று­கையில்,

ஐக்­கிய தேசியக் கட்­சியின் கிராம மட்ட செயற்­பா­டு­களும் கிளை சங்கம் நிறுவும் ஏற்­பா­டு­களும் கடும் மோச­மாக உள்­ளன. அத்­துடன் கட்­சிக்கு அங்­கத்­த­வர்­களை இணைக்கும் அங்­கத்­துவ இணைப்பு திட்­டத்­திலும் தொகுதி அமைப்­பா­ளர்­க­ளிடம் பெறும் குறை­பா­டுகள் நில­வு­கின்­றன. இவ்­வா­றான குறை­பாடு இருக்­கையில் எப்­படி தேர்­த­லுக்கு முகங்­கொ­டுக்க முடியும்?  

ஆகவே இம்­மாதம் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை முன்­னிட்டு வேட்­பா­ளர்­களை இணைப்­ப­தற்கு விண்­ணப்பம் கோரப்­படும். அதன்­ பின்னர் நாம் துரி­த­மாக கட்சி மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்டும்.  இதன்­ பி­ர­காரம் செப்டெம்பர் மாதம் 30ஆம் திக­திக்குள் கிராம மட்­டத்தில் உள்ள கிளை சங்­கங்கள் உடன் நிறு­வப்­பட வேண்டும். 

அதே­போன்று ஒக்­டோபர் 31 ஆம் திக­திக்கு முன்னர் தொகு­தி­ வா­ரி­யான செயற்­றிட்­டங்கள் அனைத்தும் பூர்த்தி செய்­யப்­பட வேண்டும். அத்­துடன் கட்­சிக்கு அங்­கத்­த­வர்­களை  இணைக்கும் பணிகள் உள்­ளிட்ட தேர்­த­லுக்கு தயா­ராகும் நட­வ­டிக்­கைகள் அனைத்தும் ஒக்­டோபர் மாதம் நடுப்­ப­கு­திக்குள் நிறைவு செய்ய வேண்டும். 

ஏனெனில் டிசம்பர் மாத­ம­ளவில் தேர்தல் நடை­பெறும். இந்த உள்­ளூ­ராட்சி தேர்தல் எமக்கு மிகவும் முக்­கி­ய­மாகும். இந்த தேர்­தலில் வெற்றி பெற்றால் மாத்­தி­ரமே தேசிய அர­சாங்­கத்தை அடுத்த இரண்­டரை வரு­டத்­திற்கு வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியும்.எமது கைகளிலேயே தேசிய அரசாங்கத்தின் பயணம் உள்ளது.எனினும் இந்த தேர்தலில் வெற்றி பெறுவது உறுதியாகும்.

அத்துடன் கட்சி மறுசீரமைப்பு செயற்பாடு­களுக்கு ஒரு மாத கால அவகாசம் தருகின்றோம்.அதற்குள் பிரச்சினைகளைத் தீர்க்க­வில்லை என்றால் சிறிகொத்தா தலைமை யக உயர்பீடம் தொகுதி நடவடிக்கை பொறுப்பேற்கும் நிலைமை ஏற்படும் என்றார்.


உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தயாராகும் ஐக்கிய தேசிய கட்சி.. உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தயாராகும் ஐக்கிய தேசிய கட்சி.. Reviewed by Madawala News on 8/04/2017 02:33:00 PM Rating: 5