Ad Space Available here

"பொளக்கடை" க்க பீக்கர் கட்டி அசிங்கங்களை தலையில் அள்ளி போட வேண்டாம்.அஸ்மி அப்துல் கபூர்

இன்று அரசியல் அரங்கில் கிராம மட்டத்தில், நகர மட்டத்தில் சர்வதேச பொறிமுறைகளில் பேச வேண்டிய முஸ்லீம்களின் அரசியல் அபிலாசைகள் , உரிமை போராட்ட விடயங்கள் இருக்க தக்கதாக தன்னை முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் சிறுவர் போராளிகள் என மார்பு தட்டும் நன்பர் தவம், ஒலுவில் பிரகடணம் என்று உரிமை கோருகின்றவர்,

தன்னை மேயராக நிறுத்த வில்லை என்பதுதான் முஸ்லீம்களின் உரிமை சமரில் குதிக்க காரணம் என்கிறார். அதுவே காரணமாம் அதாஉல்லாஹ் இழிவான அரசியல்வாதி என்றும் பேசுகிறார்.

என்ன நடந்திருக்கிறது நன்பருக்கு,

நன்றாக தானே அரசியல் பேசுவார், 

இப்போது ஏன் பிதட்டுகிறார் , அப்பாவி பெண்கள் சிலரை ஏதாவது உதவி தருவதாக அழைத்து பொளக்கடை அரசியல் புரிகிறாரே! அசிங்கங்களை தாமாக தலையில் அள்ளி கொட்டும் காகப் பண்புகளை அவர் உணர வில்லையா? 

இவ்வாறு இன்று அக்கரைப்பற்று சின்ன முல்லைத்தீவில் இடம் பெற்ற இளைஞர் ஒன்று கூடலின் போது அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் அஸ்மி அப்துல் கபூர் கருத்துரைத்தார்.

மாநகர சபை தேர்தலில் சகோ.அதாஉல்லாஹ் அகமட் சகி மேயராகும் வரை தலைவர் அதாஉல்லாஹ்வுக்கு அதிக விசுவாசத்துக்குரியவர்.

ரவூப் ஹக்கீமுக்கு கல் எறிவார்கள், நோன்பு திறக்க வந்தால் கஞ்சி பானைக்குள் மண் போடுவார்கள், ஜனநாயகத்துக்கு வழி விடாமல் தலைவரிடம் நல்ல பெயர் எடுப்பதற்க்காக கடைத்தனம் புரிவார்கள், அதனால் மர்ஹூம் குத்தூஸின் குடும்பம் அரசியலுக்காக அனாதை ஆகியும் இருக்கிறது, 

ஆனால் இப்போது தன்னை மேயராக்காமல் விட்டதனால் அதாஉல்லாஹ் வை வஞ்சிப்பதில் நியாயங்கள் இருப்பதாக உணர முடியவில்லை.

கடந்த மாநகர சபை தேர்தலில் தலைவர் என்னுடன் இருக்கிறார் என மேடைக்கு மேடை முழங்கியது வாக்கு பிச்சை கேட்டது இன்னும் ஆதாரமாக நம்மவர்களிடம் இருக்கிறது

மாகாண சபை தேர்தலில் அக்கரைப்பற்று எனும் ஊரை மற்றய ஊர்களிடமிருந்து பிரித்து பிரதேச வாதம் எனும் தீய விசத்தை பரப்பி வாக்கெடு்த்த தந்திரம்.

 இன்னுமொரு தேர்தல் வர இருக்கின்ற நேரத்தில் மாநகர சபை என்றால் பாருங்கள் மகனை மேயராக்க எனக்கு துரோகமிழைத்தார் எனும் பொய் பிரச்சாரத்தையும்,

மாகாண சபை தேர்தல் வந்தால் நீர் வழங்கள் வடிகாலமைப்பு பிராந்திய காரியாலயம் கல்முனைக்கு செல்ல வேண்டுமென கூறி பிரதேச வாதத்தை கிளப்பி அந்த மக்களின் வாக்குகளை அடைய முற்படுகின்ற தந்திரம்

இவை தொடர்பில் மக்கள் மிகுந்த தெளிவு நிலை அடைந்து விட்டனர். 

நல்லாட்சி என்று பல கோடி ரூபாக்கு இந்த சமுகம் விற்கப்பட்டதை இதுவரை எமமவர்கள் உணர வில்லை என நினைக்கிறார்களா?

அதாஉல்லாஹ் அகமட் சகி என்பவர் அக்கரைப்பற்று மாநகர மேயராக நியமிக்கப்பட்டது மாநகரின் வளங்களை காப்பதற்காகவே தவிர பிரதேச சபை காலத்தில் நிகழ்ந்த

கசப்பான அனுபவங்களை இந்த ஊர் பெறக்கூடாது என்பவதற்காகவுமாகும்.

அந்த பணியை சிறப்பாக செய்து கடனோடு இருந்த பிரதேச சபையின் நிலுவையில் சுமார் 14 மில்லியனை மீதமாக வைத்து வெளியேறிய வரலாற்றை மக்கள் புரியாமல் இ்ல்லை.

அதாஉல்லாஹ் வின் பெயரை சொல்லி தப்பி வந்த முஸ்லீம் காங்கிரஸ் காரர்களின் பிரதேச வாத மாயைக்கும் 

நரித்தந்திரங்களுக்கும் , இனி இடம் இருக்க போவதில்லை.

அதாஉல்லாஹ் வை விமர்சிப்பதை விடுத்து நாட்டிய அடிக்கல்களை முளைக்க வைத்து அவசரமாக வெளியேறும் ஆயத்தங்களை மேற் கொள்ளுங்கள்.

"பொளக்கடை" க்க பீக்கர் கட்டி அசிங்கங்களை தலையில் அள்ளி போட வேண்டாம். "பொளக்கடை" க்க பீக்கர் கட்டி அசிங்கங்களை தலையில் அள்ளி போட வேண்டாம். Reviewed by Madawala News on 8/21/2017 11:46:00 AM Rating: 5