Kidny

Kidny

ரவி குறித்து அமைச்சரவையில் கடும் வாதப் பிரதிவாதங்கள்நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை எதிர்­கொண்­டுள்ள வெளி­வி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க உட­ன­டி­யாக பதவி வில­க­வேண்­ டு­மென நேற்று இடம்­பெற்ற அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் பெரும்­பா­லான அமைச்­சர்­க­ளி னால் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. 


அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க பதவி வில­கு­வதே நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மீதான நன்­ம­திப்பை அதி­க­ரிப்­ப­தாக இருக்கும் என இதன்­போது சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி மற்றும் ஐக்­ கிய தேசி­யக்­கட்சி அமைச்­சர்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர். 


ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் 

நடை­பெற்ற நேற்­றைய வாராந்த அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் வெளி­வி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவின் விவ­கா­ரமே அதி­க­நேரம் பேசப்­பட்ட விட­ய­மாக அமைந்­தது. இதே­வேளை மிக முக்­கிய விட­ய­மாக நேற்­றைய அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் வெளி­வி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க கலந்­து­கொண்­டி­ருக்­க­வில்லை. 


இந்த நிலை­யி­லேயே அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க விவ­காரம் தொடர்பில் அமைச்­சர்­க­ளுக்­கி­டையில் வாதப்­பி­ர­தி­வா­தங்கள் கடு­மை­யாக இடம்­பெற்­றுள்­ளன. வெளி­வி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க பதவி வில­க­வேண்­டு­மென பல்­வேறு அமைச்­சர்­களும் தெரி­வித்த நிலையில் ஜனா­தி­பதி எந்­தக்­க­ருத்­தையும் வெளி­யி­டாமல் அமைச்­சர்­களின் கருத்­துக்­களை ஆழ­மாக செவி­ம­டுத்த வண்ணம் இருந்­துள்ளார். 


இதன்­போது கருத்து வெளி­யிட்­டி­ருந்த அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் ராஜித சேனா­ரட்ன பதவி விலகும் விவ­காரம் தொடர்பில் தான் அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­வுடன் பேசி­ய­தா­கவும் அவர் மீண்டும் அமைச்­ச­ராக பத­வி­யேற்கும் நிபந்­த­னை­யுடன் தற்­போது பதவி விலக தயா­ராக இருப்­ப­தாக கூறி­ய­தா­கவும் தெரி­வித்­தி­ருக்­கிறார். 


அப்­ப­டி­யாயின் உட­ன­டி­யா­கவே இரா­ஜி­னாமா செய்­யு­மாறு தான் அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­விடம் கோரிக்கை விடுத்­த­தா­கவும் அமைச்சர் ராஜித சேனா­ரட்ன அமைச்­ச­ரவைக் கூட்­டத்தின் போது குறிப்­பிட்­டி­ருக்­கின்றார். 


மேலும் அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் ராஜித சேனா­ரட்ன கருத்து வெ ளியி­டு­கையில் 

 ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­வா­னது மத்­திய வங்கி பிணை­முறி விவ­காரம் தொடர்­பாக விசா­ரணை நடத்­து­வ­தற்கே நிய­மிக்­கப்­பட்­டது. 


ஆனால் அந்த ஆணைக்­குழு தற்­போது மத்­திய வங்கி பிணை­முறி விவ­காரம் குறித்து விசா­ரணை நடத்­து­வதை தவிர்த்து அமைச்­சர்­களின் விட­யங்கள் தொடர்பில் ஆராய்ந்து கொண்­டி­ருக்­கி­றது. அமைச்­சர்­களின் விவ­கா­ரங்கள் தொடர்­பிலும் ஆரா­யத்தான் வேண்டும். ஆனால் முதலில் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­வா­னது மத்­திய வங்கி விவ­காரம் தொடர்பில் விசா­ரணை நடத்­த­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும் என்றார். 


இவ்­வாறு நேற்­றைய அமைச்­ச­ரவைக் கூட்­டத்­தின்­போது வெளி­வி­வ­கார அமைச்சர் ரவி­க­ரு­ணா­நா­யக்க தொடர்­பா­கவே அதி­க­ளவு விவா­திக்­கப்­பட்­ட­துடன் வாதப் பிர­தி­வா­தங்­களும் இடம்­பெற்­றுள்­ளன. 


இந்த அனைத்து சர்ந்­தப்­பங்­க­ளின்­போதும் ஜனா­தி­பதி மிகவும் அமை­தி­யான முறையில் விட­யங்­களை செவி­ம­டுத்­த­தாக அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் கலந்­து­கொண்ட சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் கேச­ரிக்குத் தெரி­வித்தார். 

இதே­வேளை நேற்­றைய அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் கலந்­து­கொண்ட பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அமைச்­ச­ரவைக் கூட்டம் முடி­வ­டை­வ­தற்கு முன்­பா­கவே வெளி­யே­றி­யி­ருந்தார். வழ­மை­யாக செவ்­வாய்க்­கி­ழமை காலை நடை­பெறும் அமைச்­ச­ரவைக் கூட்டம் இவ்­வாரம் நேற்று புதன்­கி­ழ­மையே நடை­பெற்­றுள்­ளது. 


அதா­வது அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க விவ­காரம் தொடர்பில் மிகவும் பர­ப­ரப்­பாக பேசப்­படும் மற்றும் விவா­திக்­கப்­படும் என்ற எதிர்­பார்ப்பு பாரி­ய­ளவில் நில­விய சூழ­லி­லேயே அமைச்­ச­ரவைக் கூட்டம் நேற்­று­வரை ஒத்­தி­வைக்­கப்­பட்­டது. அதற்­கி­டையில் ஐக்­கி­ய­தே­சி­யக்­கட்சி தனது பாரா­ளு­மன்றக் குழுக்­கூட்­டத்தை நடத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்­த­போ­திலும் இறுதி நேரத்தில் அக்­கூட்­டமும் கைவி­டப்­பட்­டி­ருந்­தது. 


 

இது இவ்­வாறு இருக்க வெளி­வி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க பதவி வில­க­வேண்­டு­மென்ற அழுத்­தங்கள் தற்­போது அதி­க­ரித்து வரு­வதை காண­மு­டி­கி­றது. கூட்டு எதி­ரணி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­விற்கு எதி­ராக முன்­வைத்­துள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை எப்­போது விவா­தத்­திற்கு எடுத்­துக்­கொள்­வது என்­பது தொடர்­பாக இன்று வியா­ழக்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் தீர்­மானம் எடுக்­கப்­ப­ட­வுள்­ளது. 


நேற்று முன்­தினம் நடை­பெற்ற கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் இன்­றைய தினம் அது­தொ­டர்பில் தீர்­மானம் எடுப்­ப­தற்கு இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டுள்­ளது. மேலும் ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யி­னதும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யி­னதும் பல்வேறு அமைச்சர்கள் ரவி கருணாநாயக்க பதவி விலகவேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். 


அமைச்சர் தயாசிறி ஜயசேகர, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால அமைச்சர் தயாகமகே உள்ளிட்டோர் அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவி விலகவேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். 


அதுமட்டுமன்றி அமைச்சர் சஜித் பிரேமதாஸ ஊழல்வாதிகளுக்கு ஆதரவாக தன்னை வாக்களிக்க கோரினால் தான் அரசாங்கத்தில் இருந்து விலகிவிடுவதாகவும் எச்சரித்திருக்கிறார்.இந்த நிலையிலேயே நேற்றையதினம் அமைச்சரவைக் கூட்டத்திலும் இந்த விவகாரம் தொடர்பில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன. 


ரவி குறித்து அமைச்சரவையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் ரவி குறித்து அமைச்சரவையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் Reviewed by Madawala News on 8/10/2017 12:00:00 PM Rating: 5