Kidny

Kidny

மத்தளை விமான நிலையம் தொடர்பில் நாளை இருதரப்பு கலந்துரையாடல்கள்...


மத்தல விமான நிலையத்தை கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்யும் இருதரப்பு ஒப்பந்தம் தொடர்பில் ஆராய்வதற்கு இந்திய உயர் மட்ட குழு இலங்கை வந்துள்ளது. 

நாளை இருதரப்பு கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன. 

நாளை காலை 10 மணிக்கு அமைச்சில் இடம்பெறவுள்ள இந்த கலந்துரையாடலில் இந்திய அரசின் உயர் மட்ட அதிகாரிகள் குழுவினர் கலந்துக் கொள்ள உள்ளதாக சிவில் விமான சேவைகள் மேலதிக செயலாளர் ரத்நாயக்க தெரிவித்தார். 

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ளதால் மத்தளையை இந்தியாவுக்கு பெற்றுக்கொள்வதில் இந்தியா முனைப்புக் காட்டி வருவதாக த ஹிந்து ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது.

மத்தளை விமான நிலையத்தை இந்தியாவுக்கு 40 வருடங்களுக்கு பப்ளிக் பிரைவேட் பார்ட்னர்ஷிப் ஒப்பந்ததத்தில் வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.


மத்தளை விமான நிலையம் தொடர்பில் நாளை இருதரப்பு கலந்துரையாடல்கள்... மத்தளை விமான நிலையம் தொடர்பில் நாளை இருதரப்பு கலந்துரையாடல்கள்... Reviewed by Madawala News on 8/17/2017 09:52:00 PM Rating: 5