tg travels

முஸ்லிம் மகளிர் கல்லூரியில் இடம்பெற்றதாக கூறப்படும் பாரிய ஊழல் மோசடி சம்பந்தமான வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.. 


பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியின் ஓய்வு பெற்ற அதிபர் ஹஜர்ஜான் மன்சூர் அவர்களால் மேற்கொள்ளப்பட் பாரிய அளவிலான ஊழல் மோசடி சம்பந்தமான வழக்கு (FR /150/2014) சுமார் நான்கு வருடங்களாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.



ஹஜர்ஜான் மன்சூர் அவர்களின் நிர்வாக காலப்பகுதியில் பாடசாலையில் நடைபெற்ற பாடசாலை நிதி மோசடி அதாவது Shirley ganegoda & co chartered accountants 

நிறுவனத்தால் செய்து முடிக்கப்பட்ட வருடாந்த கணக்கறிக்கையை திறுத்தி மோசடி செய்து வருடாந்த கூட்டத்தில் பெற்றோருக்கு வழங்கியமை,மாணவிகளை பாடசாலைக்கு சேர்பதற்க்கு லஞ்சம் வாங்கியமை.


M.A. marikar No; 29 /2/1/1 peris road, mount lavinia .என்பவரின் பிள்ளையை பாடசாலைக்கு சேர்ப்பதற்கு 200000/= வாங்கியமை. 


M.K.S shafeeka No. 373 Kandy road abepussa warakapola என்ற வறிய குடும்பம் ஒன்றைச்சேர்ந்த பிள்ளையை சேர்க்க 07.05.2013. அன்று 150000 /= லஞ்சம் பெற்றமை. 


M.I.M. irfan 143/1/4 Moor Road colombo 12. என்பவரின் பிள்ளையை பாடசாலைக்கு செர்ப்பதற்கு 25000/= பெற்றுக்கொண்டமை. இவை உற்பட இன்னும் ஏராமான லஞ்ச கொடுப்பணவுகள்.


பாடசாலை மாணவிகளின் பணத்தை தனது சொந்த தேவைக்காக பயன்படுத்தியமை, 

பாடசாலை நிதியை தனது சொந்த தேவைக்கா சுகபோக வாகனம் ஒன்றை வாடகைக்குபெற ரூபா 

1934014/= பாடசாலை பணத்தில் செலுத்தியமை, பாடசாலை நிதியில் இருந்து ரூபா 79400 /= தனது பாவனைக்கு கையடக்கத் தொலைபபேசி ஒன்றை பெற்றுக்கொண்டமை.


தனது தனிப்பட்ட போசன தேவைக்காக ரூபா 445927/= பயன்படுத்தியமை (இத்தொகையானது தனது வீட்டில் நடைபெற்ற function ஒன்றிற்காக பயன்படுத்தப்பட்ட bill )

இதை பாடசாலை கணக்கால் செலுத்தப்பட்டுள்ளதாக விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது. 


மேலும் தனது கையடக்க தொலைபேசி கட்டனம் 23600/= பாடசாலை பணத்தில் செலுத்தியமை.தனது இனையத்தள கண்டனம் 127548/= பாடசாலை பணத்தில் செலுத்தியமை, தனது சொந்த பாவனைக்கு leptop ஒன்றை ரூபா 125000/= வாங்கியமை ,

தனது ஊழலுக்கு உதவி செய்த புவிராஜ் எனும் உதவி ஆசிரியைக்கு பாடசாலை பணத்தில் 28500/= கையடக்கத் தொலைபபேசி பெற்றுக் கொடுத்தமை உற்பட பாடசாலைக்கு சொந்தமன blue ray 14999/= DVD காணாமல் போனமை, Sony bravia 40" TV காணாமல் போனமை, ஜின்னஸேனா தன்னீர் இயந்திரம் 24335/= காணாமல் போனமை, 

சோற்றுப்பீங்கான் set 

2900/= காணாமல் போனமை, மின்அலுத்தி 

3250 /= காணாமல் போனமை, உற்பட இன்னும் ஏராளமான ஊழல்கள் அடங்கிய கணக்கியல் அறிக்கை ஒன்றை கல்வி அமைச்சின் உள்ளக கணக்கியல் பிரிவிவு கல்வி அமைச்சுக்கு கணக்கியல் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிய படுத்தியது. இதற்கமைய கணக்கறிக்கை இலக்கம் ED/05//08/01/20 கொண்ட இவ்வறிக்கையின்படி இலங்கை பாடசாலை வரலாற்றிலேயே முதல் முக்கியம் பொறும் பலகோடி அளவிலான உழல் மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டன. 


இம்மோசடிகள் அவ்வப்போது Daily mirror 14.02.2014 ,Mawbima 19.02.2014, Thiwaina 10.04.2014 , Lankatheepe 26.02.2014,Rawaye 27.04.2014,Thiwaina 16.05.2014 ,Rawaye 23.02.2014,Rawaye 02.03.2014,Lankatheepe 03.02.2014 


பத்திரிகைகளிலும் பக்கம் பக்கமாக வெளியாகின போதிலும் நம்சமுதாயத்திற்கு செவிடன் காதில் ஊதிய சங்காகின.இதற்கு மத்தியில் இதற்கு எதிராக இப்பாடசாலை பெற்றோர்கள் கிளர்ந்தெழுந்து ஆத்திரம் அடைந்த போதிலும் அதிபருக்கு மிக நெருக்கமான குறுகிய நோக்கம் கொண்ட முஸ்லிம் அரசியல்வாதிகளின் கோரப்பிடிகளை தாண்ட முடியவில்லை. 


இதனா‌ல் இப்பாடசாலை பெற்றோர்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் உதவியை நாட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. 


மேலும் இவருக்கு எதிராக கல்வி அமைச்சின் உள்ளக கணக்கியல் பிரிவினால் லஞ்ச ஊழல் ஆனைக்குவிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுளதோடு வெள்ளவத்தை மோசடி விசாரணை பிரிவிலும் முறைபாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 


இதுநீங்களாக இப்பாடசாலை பெற்றோகளால் இலஞ்சம் ஊழல் ஆனைக்குவிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுளதோடு BC/2876/2013

மேலும் வெள்ளவத்தை மோசடி தடுப்புப்பிரிவிலும் முறைபாடுகள் பதியப்பட்டுள்ளது IR 245/01/15

முறைப்பாட்டுத்திகதி 04.03.2015. 

மேலும் இவ்விப்போது வெளியாகிக்கொண்டிருக்கும் இப்படசாவையின் பரிதாபகரமான நிலை மிகவும் கவலைக்குரிய தாகும். இத்தனைக்கும் நீதி மன்றத்தினால் ஓய்வுதியம் நிறுத்தப்பட்ட நிலையில் வெறும் கையுடன் பதவிக்கு வந்த அதிபர் பலகோடிகலுக்கு சொந்தக்காரராக ஓய்வு பெற்றுச்சென்றது மட்டுமில்லாமல் வறியமாணவிகளின் பணத்தில் கூமாலமடித்து பல லட்சம் பரிசுப் பொதிகலையும் வாங்கிச் சென்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும் 

மேலும் கல்வி அமைச்சின் உள்ளக கணக்கியல் பிரிவினால் முன்வைக்கப்பட் 17 ஆம் பந்தியில் முன்வைக்கப்பட்ட ஆலேசனையானது. "இவர் இப்பாடசாலையில் சேவை செய்த காலப்பகுதியில் வாங்கப்பட்ட சொத்துக்கல் தொடர்பில் வாக்குமூலம் பெறப்பட வேண்டும் " என்பதை செய்யவிடாமல் கடுமையாக எதிர்தது நம் முஸ்லிம் அரசியல் வாதிகளேதான். 

நம்சமுதாயத்திற்கு எதிரி நாமேதான். இனியாவது சிந்திக்குமா நம்சமுதாயம்.

முஸ்லிம் மகளிர் கல்லூரியில் இடம்பெற்றதாக கூறப்படும் பாரிய ஊழல் மோசடி சம்பந்தமான வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது..  முஸ்லிம் மகளிர் கல்லூரியில் இடம்பெற்றதாக கூறப்படும் பாரிய ஊழல் மோசடி சம்பந்தமான வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது..  Reviewed by Madawala News on 8/27/2017 10:12:00 PM Rating: 5