Ad Space Available here

இன்று வாக்களிப்பு வரை நீங்கள் எதை புடுங்கிக்கொண்டு இருந்தீர்கள்?


சொல்வதை தவிர வேறு வழியில்லை..


படு மோசமான பாரபட்சங்களோடு உள்ளூராட்சி சபைகளுக்கான சட்ட மூலம் நிறைவேறியிருக்கிறது.

வாக்களிப்பிற்கு சில கணம் முன்னே எல்லை நிர்ணயத்தில் நிகழ்ந்த குளறுபடிகளை, மோசடிகளை பற்றி நமது நாநாமார் நாடாளுமன்றில் பேசுகிறார்கள்.

இந்த சுத்துமாத்துகள் நிகழ்ந்து எவ்வளவு காலம்.இன்று வாக்களிப்பு வரை நீங்கள் 

எதை புடுங்கிக்கொண்டு இருந்தீர்கள்?

மனோ கணேசனுக்கு இருந்த தைரியத்தில் ஒரு தூசாவது உங்களுக்கு இருந்ததா?

சட்டமூலம் சிங்கள பெருந்தேசியத்தின் ஆதரவோடு வெற்றிகரமாக நிறைவேறிற்று.

தெல்தோட்டையில் நான்கு பேர் வந்த முஸ்லிம் பிரதிநிதிகள் எண்ணிக்கை இனி ஒன்றாகும்!

இது உங்களுக்கு இன்றுதான் தெரியுமா?

திருகோணமலையில் விகிதாசாரத்தில் கூடுதலாக வாழுகிற முஸ்லிம்களுக்கு ஒட்டு மொத்த மாவட்டத்தில் குறைந்த உறுப்பினர்களும் சிறுபான்மையாக அங்கிருக்கும் சிங்களவர்களுக்கு கூடுதலான உறுப்பினர்களும் இந்த சட்ட மூலத்தில் கிடைக்கிறது!

இது உங்களுக்கு இன்றுதான் தெரியுமா?

சம்மாந்துறை தொகுதியில் 40,000 வாக்காளர்களுக்கு 12 உறுப்பினர்கள்!

லஹுகலையில் 5,000 வாக்காளர்களுக்கு 12 உறுப்பினர்கள்!

இதுவும் இன்றுதான் தெரியுமா?

இதைபோல் நாடெங்கும் நமக்கு நடந்துள்ள அநீதிகள் ஏராளம்! 

கிட்டத்தட்ட நமது அடிப்படை அரசியலை கொன்று முடித்து அதன் சவப்பெட்டி மீது சிங்களம் ஆணி அறைந்த நாள் இது.

இந்த சட்ட மூலத்தின் நகல் வரைபு, மற்றும் எல்லை மீள் நிர்ணய குழுக்களின் நடமாட்டம் என எத்தனை வருடங்களாய் இந்த விடயங்கள் இந்த நாட்டில் வலம் வந்தன?

அப்போதெல்லாம் 'வேறு' வேலைகள் பார்த்து திரிந்து விட்டு இன்று வாக்களிப்பின் கடைசித்துளி நிமிடத்தில் வந்து " நாங்கள் வாக்களிப்பிற்கு ஆதரித்தால் எங்களது சமூகத்திற்கு பதில் சொல்ல வேண்டி வரும்" என்று அங்கலாய்ப்பதில் யாருக்கென்ன பயன்?

நீங்கள் சாட்டுக்கழிக்கின்றீர்கள்...

நீங்கள் வழமை போல எங்களது காதுகளில் பூச்சுற்றுகின்றீர்கள்....

எல்லாம் முடிந்து விட்டது.

1989 ல் பிரேமதாசவை ஓர் இரவில் பணியவைத்து வீதாசார தேர்தல் முறையில் நமக்கான வெட்டுப்புள்ளியை வெற்றிகரமாக பெற்றுத்தந்தானே அவனது கப்று பக்கம் உங்களது வெட்கங்கெட்ட முகங்களை தூக்கிக்கொண்டு இனிமேல் போய்விடாதீர்கள்!

Nail in the Coffin நடந்து முடிகிற போது நாடாளுமன்ற தரையில் என்ன செப்பமாய் நாடகம் ஆடுகின்றீர்!

வெட்கம்..

அதனை தலைவரின் காரசாரமான உரையென்று ஊரெல்லாம் கூவியும் விற்கின்றீர்!

கடும் காமடியாகவும் எரிச்சலாகவும் இருக்கிறது.

என்ன செய்ய ? சாதாரண மக்களுக்கு இந்த மீள் எல்லை நிர்ணயம், சட்ட மூலம், வாக்கெடுப்பு, இன்று என்ன நடந்தது என்பதெல்லாம் சுத்த சூனியம்!

அந்த அறியாமையே உங்களது அதிஷ்டமும் கூட !

சால்வைகளோடும், தொப்பிகளோடும் அந்த சூனியத்தின் மீது மணல் வீடு கட்டி விளையாட தேர்தல் மணி அடித்ததும் எழுந்து வருவீர்கள்.

மக்களின் அறியாமை மற்றும் மறதி என்பன உங்களைப்போன்றவர்களை மீண்டும் மீண்டும் அரியணையில் ஏற்றும்.

சில காவல்காரர்கள் மட்டும் தங்களது மனச்சாட்சிகளை கைகளில் சுமந்தவாறு எழுதிக்கொண்டும், பேசிக்கொண்டும் இருப்பார்கள்.

-முஜீப் இப்ராஹிம்-

இன்று வாக்களிப்பு வரை நீங்கள் எதை புடுங்கிக்கொண்டு இருந்தீர்கள்? இன்று வாக்களிப்பு வரை நீங்கள் எதை புடுங்கிக்கொண்டு இருந்தீர்கள்? Reviewed by Madawala News on 8/25/2017 11:52:00 PM Rating: 5