Kidny

Kidny

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் தற்காலிகமாக இடைநிறுத்தம்


றிசாத் ஏ காதர் 


அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவராக செயற்பட்டுவந்த திரு எஸ். லோகநாதன் தற்காலிகமாக அப்பதவியில் இருந்து இடைநிறுத்தம்.


ஆகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க முகாமைத்துவ சபை 2017.08.07ஆந் திகதி இடம்பெற்றது. இக்கூட்டத்திலே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் தலைவராக செயற்பட்ட திரு எஸ். லோகநாதனுக்கு முகவரியிடப்பட்டு 2017.08.14ஆந் திகதி இது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த கடிதத்தில், மேற்படி விடயம் தொடர்பாக எமது தொழிற்சங்கத்தின் முகாமைத்துவ நிறைவேற்றுச்சபை 2017.05.01 ஆந் திகதிய வருடாந்த பொதுச் சபையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு முரணாகவும், எவ்வித பொருத்தமான காரணமுமின்றி பொதுச் சபையில் தெரிவு செய்யப்பட்ட நிருவாக சபை உறுப்பினர்களையும், ஏனையவர்களையும் தன்னிச்சையான முறையில் முடிவு எடுத்து நிறுத்தியுள்ளீர்கள்.


மேலும்; சட்டப்படியாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை அவர்களது தொழிற்சங்க கடமைப் பொறுப்புக்களை செய்யாது தடுத்து வருவதாக அங்கத்தவர்களிடமிருந்து முறைப்பாடும் கிடைக்கப்பெற்றுள்ளது. இதன் அடிப்படையிலும் தொழிற் சங்க யாப்பு விதி முறைகளுக்கு (யாப்பு – பந்தி 10(4,7,8) பந்தி 25) முரணாக தங்களுடைய செயற்பாடு அமைவதாலும் 2017.08.07 ஆந் திகதிய தொழிற் சங்கத்தின் முகாமைத்துவ சபையின் அதி உயர்பீட சபைக்கூட்டத் தீர்மானத்திற்கு அமைவாக, தொழிற்சங்க தலைவர் பதவியிலிருந்து தற்காலிகமாக இடை நிறுத்தப்படுகின்றீர்கள் என்பதனை மனவருத்தத்துடன் அறியத்தருகிறேன். என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் யாப்பின் பந்தி 18(12)க்கு அமைவாக இணை நிறுவனங்களின் தலைவர் பதவியும் வறிதாகிறது என்பதனையும் கவனத்திற்கு தருகின்றேன். எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேற்படி அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க நடவடிக்கைகளை விசேட பொதுக்கூட்டம் இடம்பெறும் வரைக்கும் தற்காலிகமாக வழிநடாத்துவதுக்கு இணைத்தலைவர்களாக கிழக்கு மாகாணத்திற்கு திரு.பு.பாக்கியம் என்பவரும், வட மாகாணத்திற்கு திரு.சு.சித்திரன் ஆகிய இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.


மேற்படி இரு இணைத்தலைவர்களும் தமது கடமைகளை திறம்பட மேற்கொள்வதுக்கு இடையூராக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட திரு எஸ்.லோகநாதன் தனது நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என்றும், தவறும்பட்சத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


குறித் கடிதத்தில் சங்கத்தின் நிதி மற்றும் நிருவாகத்துக்கு பொறுப்பான செயலாளர் கே.கணேசலிங்கம் ஒப்பமிட்டு அனுப்பிவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


மேற்படி தற்காலிக இடைநிறுத்தற் கடிதங்கள் முதலமைச்சர், கிழக்கு மாகாணம், வடக்கு மாகாணம் பிரதம செயலாளர்; கிழக்கு மாகாணம், வடக்கு மாகாணம் மற்றும்​அமைச்சின் செயலாளர்கள். கிழக்கு மாகாணம், வடக்கு மாகாணம், தொழில் ஆணையாளர், தெரழிற் சங்க பிரிவு, கொழும்பு. மற்றும் திணைக்களத் தலைவர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி - கல்முனை , சம்மாந்துறை, அக்கரைப்பற்று, மாவட்ட செயலாளர்கள்,பிரதேச செயலாளர்கள் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.


அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் தற்காலிகமாக இடைநிறுத்தம் அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் தற்காலிகமாக இடைநிறுத்தம் Reviewed by Madawala News on 8/24/2017 10:14:00 AM Rating: 5