Ad Space avaiable

பிரதமரை வாழ்த்த நாளை விசேட பாராளுமன்ற அமர்வு..


பாராளுமன்ற வாழ்வில் நான்கு தசாப்தங்களைப் பூர்த்தி செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பாராளுமன்றத்தில் வாழ்த்து தெரிவிக்கப்படவுள்ளது.இதனை முன்னிட்டு நாளை விசேட பாராளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது.

பாராளுமன்ற அமர்வுக்கு முன்னர் நாளை காலை 9.15ற்கு பாராளுமன்ற வளாகத்தில் போதி பூஜை வழிபாடு நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

நாளை கூடவுள்ள விஷேட அமர்வில் கட்சி தலைவர்கள் அனைவரும் பிரதமரை வாழ்த்து உரை நிகழ்த்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதமரை வாழ்த்த நாளை விசேட பாராளுமன்ற அமர்வு.. பிரதமரை வாழ்த்த நாளை விசேட பாராளுமன்ற அமர்வு.. Reviewed by Madawala News on 8/03/2017 10:00:00 PM Rating: 5