Kidny

Kidny

நாளைய போட்டிக்கு விஷேட பாதுக்கப்பு ஏற்பாடுகள் 


கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நா​​ளை (31) நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டிக்கு விசேட ​பொலிஸ் பாதுகாப்பு வ​ழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் த​லைமையகம் தெரிவித்துள்ளது. சுமார் ஆயிரம் பொலிஸார் இதன்போது பாதுகாப்புக் கடமையில் ஈடுபடவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டி நாளை கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், மைதானத்தில் விசேட சிசிடிவி கெமராக்களும் பொருத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் த​லைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி கடந்த 27 ஆம் நடைபெற்றது.இதன்போது இந்திய அணி வெற்றிபெறும் நிலையில் இருந்த போது அங்கிருந்த கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்துக்குள் பிளாஸ்ரிக் போத்தல்கள் என்பவற்றை வீசி கூச்சலிட்டனர்.

இந்த சம்பவத்தையடுத்தே நாளை நடைபெறவுள்ள போட்டியின் போது பலத்த பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாளைய போட்டிக்கு விஷேட பாதுக்கப்பு ஏற்பாடுகள்  நாளைய போட்டிக்கு விஷேட பாதுக்கப்பு ஏற்பாடுகள்  Reviewed by Madawala News on 8/30/2017 09:16:00 PM Rating: 5