Kidny

Kidny

" எனக்கு ஒன்றும் தெரியாது எனது மனைவியிடமே கேட்கவேண்டும் " 


பிணை முறி மோசடியில் சிக்கியுள்ள அர்ஜுன் அலோசியஸ் இடமிருந்து சொகுசு வீடு ஒன்றை வாடகைக்கும் பின்னர் அதனை விலைக்கும் பெற்றுக்கொண்டதாக கூறப்படும் சர்ச்சையில் அமைச்சர் ரவியின் மனைவி நேரடியாக தொடர்புபட்டுள்ள நிலையில் இன்று அமைச்சர் ரவி ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகி இருந்தார்.


ஏற்கனவே இரண்டு தடவைகள் விசாரணைக்கு சமூகமளிக்காத அமைச்சர் ரவி இன்று காலை 10.30 மணிக்கு சமூகளித்த அதேவேளை அவரிடம் ஐந்து மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


குறித்த வாடகை வீட்டை பெற்றுக்கொண்டது பற்றியோ கொள்வனவு செய்த முறை தொடர்பில் தனக்கு ஒன்றும் தெரியாது என குறிப்பிட்டுள்ள அமைச்சர் ரவி தனது மனைவியும் மகளுமே அதனை வாடகைக்கு பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர்களே அதனை கொள்வனவு செய்துள்ளதாகவும் குறித்த இருவரும் நிறுவனம் ஒன்றில் பணிப்பாளர்களாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


குறித்த சொகுசு வீட்டை வாடகைக்கு பெற்ற தினத்தில் குறித்த வீட்டுத்தொகுதிகளை தனது மனைவியும் மகளும் வாடகைக்கு பெற்றுக்கொண்டது தொடர்பில் தான் அறிந்துகொண்டதாகவும் தான் தனது மனைவி மற்றும் மகளுடன் சேர்ந்து குடும்ப உறவை பேணி வந்த போதும் தனக்கு அவர்களின் தொழில் தொடர்பில் தனக்கு எதுவித தொடர்பும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.



" எனக்கு ஒன்றும் தெரியாது எனது மனைவியிடமே கேட்கவேண்டும் "  " எனக்கு ஒன்றும் தெரியாது எனது மனைவியிடமே கேட்கவேண்டும் "  Reviewed by Madawala News on 8/02/2017 07:20:00 PM Rating: 5