Kidny

Kidny

ராஜிதவை நாம் பாதுகாப்போம் !


அமைச்சர் ராஜிதவை காப்பாற்ற தாங்க காள்மிறங்குவதாக றவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.

நேற்று ஐக்கிய தேசிய கட்சி  நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது இதனைக் குறிப்பிட்டனர். 

மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

அரசாங்கம் முன்னெடுக்கும் ஜனநாயக நகர்வுகளை தடுக்கும் வகையிலும், எமது வேலைத்திட்டங்களை தடுக்கும் வகையில் பொது எதிரணியினர் செயற்பட்டு வருகின்றனர். 

நல்லாட்சி என்பது மோசமான ஆட்சி அல்ல. இந்த ஆட்சியில் மக்களுக்கான வேலைகளை நாம் முன்னெடுக்க வேண்டும். அதன் நோக்கத்தில் நாம் செயற்பட்டு வருகின்றனர். நாம் மக்களுக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து நாட்டை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை எடுக்கும் போது அதை தடுக்கும் வகையில் இவர்கள் சிலர் செயற்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கை விடயமாகும். 

கடந்த 11 ஆண்டுகளாக இந்த நாடு பின்னோக்கி சென்றுள்ளது. இந்த நாட்டின் சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளது. ஊழல் மோசடிகளில் நாட்டின் நிறைந்திருந்த நிலையில் அவற்றில் இருந்து நாட்டையும் மக்களையும் மீட்கவே நல்லாட்சி அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. 

நாட்டை சரியான திசையில் மாற்றும் பயணத்தை நாம் முன்னெடுத்து வருகின்றோம். இதில் சரியான நபர்களை இணைத்துக்கொண்டு பயணித்து வருகின்றோம். இன்று எவரும் பயமின்றி கதைக்கின்றனர். இதை தாங்கிக்கொள்ள முடியாத நபர்கள் அரசாங்கத்தில் முக்கிய நபர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணைகளை கொண்டுவந்து பாராளுமன்றத்தில் அனாவசிய செயற்பாடுகள்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனக்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்தனர், இப்போது அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையினை கொண்டுவந்து அரசாங்கதின் அடுத்தகட்ட பயணத்தை தடுக்க முயற்சித்து வருகின்றனர். 

இவர்கள் எவ்வாறான முயற்சிகளை முன்னெடுத்த போதிலும் ஐக்கிய தேசியக் கட்சி பலமாக செயற்பட்டு வருகின்றது. எமது உறுப்பினர்களை காப்பாற்ற நாம் எப்போதும் முன்வருவோம். ஆகவே இந்த நம்பிக்கையில்லா பிரேரணையினை அதி பெரும்பான்மையில் தோற்கடித்து நல்லாட்சி அரசாங்கத்தை பலப்படுத்துவோம் எனக் குறிப்பிட்டார். 

ராஜிதவை நாம் பாதுகாப்போம் ! ராஜிதவை நாம் பாதுகாப்போம் ! Reviewed by Madawala News on 8/26/2017 10:15:00 AM Rating: 5