Ad Space avaiable

கட்சிக்குள் பிரச்சினைகள் இருந்தாலும், எதிர்கால தேர்தல்களில் சகலரும் ஒன்றாக போட்டியிடுவோம்..


புதிய முறையின் கீழ் தேர்தலை நடத்தும் திருத்தப் பிரேரணை ஒக்டோபர் அமர்வுகளில் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் என்று அமைச்சர் சுசில் பிறேமஜயந்த தெரிவித்துள்ளார். 

அவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றினார்.

புதிய முறையின் கீழ் தேர்தலை நடத்தும் நோக்கில் திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

கட்சியின் 66 ஆவது ஆண்டு நிறைவு விழா செப்டெம்பர் இரண்டாம் திகதி பொரளை கம்பல் பூங்காவில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்குவார். 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் பிரச்சினைகள் இருந்தாலும், எதிர்கால தேர்தல்களில் சகலரும் ஒன்றாக போட்டியிடக் கூடுமென அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.

அதே நேரம் அரசாங்க சொத்துக்களை விற்பனை செய்வதே ஐக்கிய தேசிய கட்டியின் கொள்கை என குறிப்பிட்ட அவர் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து அரசில் இருப்பதா என்பது தொடர்பில் விரைவில் தீர்மானாம் எடுக்கப்படும் என குறிப்பிடார்.

கட்சிக்குள் பிரச்சினைகள் இருந்தாலும், எதிர்கால தேர்தல்களில் சகலரும் ஒன்றாக போட்டியிடுவோம்.. கட்சிக்குள் பிரச்சினைகள் இருந்தாலும், எதிர்கால தேர்தல்களில் சகலரும் ஒன்றாக போட்டியிடுவோம்.. Reviewed by Madawala News on 8/11/2017 12:50:00 PM Rating: 5