Kidny

Kidny

இலங்­கையில் வாழும் மக்கள் ஈரா­னிய தேசத்­தின்­மீது பெரும் மதிப்பு வைத்துள்­ளனர் ; கரு ஜயசூர்ய ..


இலங்­கைக்கு தொழில்­நுட்ப பொறி­யியல் உத­வி­களை வழங்க ஈரான் தயா­ரா­க­வுள்­ள­தாக அந்­நாட்டு ஜனா­தி­பதி ஹசன் ரூஹானி தெரி­வித்­துள்ளார். 


கடந்த 5 ஆம் திகதி ஈரா­னிய ஜனா­தி­பதி ஹசன் ரூஹா­னியின் பத­வி­யேற்பு நிகழ்­வு தெஹ்­ரானில் நடை­பெற்­றது. இந்­நி­கழ்வில் சபா­நா­யகர் கரு ஜெய­சூ­ரிய கலந்­துகொண்­டி­ருந்தார். இதன்­போது இரு­வ­ருக்­கு­மி­டையில் அர­ச­மட்ட பேச்­சு­வார்த்­தை­களும் இடம்­பெற்­றுள்­ளன.


இது தொடர்பில் அந்­நாட்டு ஊட­கங்கள் விடுத்­துள்ள செய்­தியில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது,


இலங்­கைக்கும் ஈரா­னுக்­கு­மி­டையில் எப்­போதும் நட்­பு­ரீ­தி­யான தொடர்­புகள் இருந்து வந்­துள்­ளன. வர்த்­தக, கலா­சார ரீதி­யான தொடர்­பு­களும் இரு நாடு­க­ளுக்­கு­மி­டையில் வலு­பெற்­றுள்­ளது. இந்த நேரத்தில் இரு நாடு­க­ளுக்­கி­டை­யி­லான தொடர்பை வளர்த்­தெ­டுக்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். இதற்­கென ஈரான், தொழில்­நுட்ப பொறி­யியல் உத­வி­களை இலங்­கைக்கு வழங்க தீர்­மா­னித்­துள்ளோம். 


இலங்கை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஈரா­னுக்கு வரு­கை­தந்துள்­ளமை அர­சியல் ரீதி­யான வலுப்­ப­டுத்­த­லுக்­கு முக்­கி­ய­மா­ன­தாக இருக்­கு­மென நம்­பு­கின்றோம். அபி­வி­ருத்திப் பாதையில் முன்­னோக்கி செல்ல நாம் தயா­ராக இருக்க வேண்டும். அதற்­கான தயார்­ப­டுத்­தல்­களை இரு நாடு­க­ளுமே மேற்கொள்ள் வேண்டும் என ஈரா­னிய ஜனா­தி­பதி ஹசன் ரூஹானி தெரி­வித்­துள்ளார்.


இதன்­போது கருத்து தெரி­வித்த சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய, இலங்­கையில் வாழும் மக்கள் ஈரா­னிய தேசத்­தின்­மீது பெரும் மதிப்பு வைத்துள்­ளனர். ஆரம்ப காலம் முதலே இலங்­கைக்கு: நட்பு ரீதி­யான அனைத்து உத­வி­க­ளையும் ஈரான் வழங்கி வரு­கின்­றது. ஈரா­னிய ஜனா­தி­பதி ஹசன் ரூஹா­னியின் பத­வி­யேற்பு நிகழ்வில் எம்­மையும் அழைத்து மிகவும் சிறப்­பாக எம்மை வர­வேற்­ற­மைக்கு எனது மன­மார்ந்த நன்­றிகள்.

தற்­போது இலங்­கையில் மேற்­கொள்­ளப்­படும் கட்­டு­மானத் திட்­டங்­க­ளுக்கு ஈரானின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என நினைக்கின்றேன். சிறந்த தொழில்நுட்ப அபிவிருத்தி மார்க்கங்களை இனங்கண்டு தொடர்ந்தும் இரு நாடுகளும் வலுவான தொடர்புளை பேணும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

இலங்­கையில் வாழும் மக்கள் ஈரா­னிய தேசத்­தின்­மீது பெரும் மதிப்பு வைத்துள்­ளனர் ; கரு ஜயசூர்ய .. இலங்­கையில் வாழும் மக்கள் ஈரா­னிய தேசத்­தின்­மீது பெரும் மதிப்பு வைத்துள்­ளனர் ; கரு ஜயசூர்ய .. Reviewed by Madawala News on 8/08/2017 11:16:00 PM Rating: 5